Asianet News TamilAsianet News Tamil

வழிகாட்டு குழுவில் ஓபிஎஸ் தரப்பு புறக்கணிப்பா? அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி சரவெடி விளக்கம்..!

பிரச்சனைகள் வராதா அதில் குளிர்காயலாம் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போடுகின்ற வகையில் ஏகோபித்த உணர்வுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். எதிரிகள், துரோகிகள் புறமுதுகை காட்டி ஓடும் வகையில் புதிய புறநானூற்றை அதிமுக படைக்கும். 2021-ல் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம் என்றார்.

Ignore Panneerselvam side in the steering committee...minister jayakumar Description
Author
Chennai, First Published Oct 7, 2020, 12:53 PM IST

பாரபட்சமின்றி ஒருமித்த கருத்துடன் தான் 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். இதையடுத்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார்.இதன்பின்னர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர்-ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Ignore Panneerselvam side in the steering committee...minister jayakumar Description

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. இன்று பொன்னான நாள். அதிமுக தொண்டர்களும் தமிழக மக்களும் எதிர்பார்த்த அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு மகிழ்ச்சியான ஒருமித்த கருத்து எட்டப்பட்டு நல்ல முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். 

Ignore Panneerselvam side in the steering committee...minister jayakumar Description

பிரச்சனைகள் வராதா அதில் குளிர்காயலாம் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போடுகின்ற வகையில் ஏகோபித்த உணர்வுடன் முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறோம். எதிரிகள், துரோகிகள் புறமுதுகை காட்டி ஓடும் வகையில் புதிய புறநானூற்றை அதிமுக படைக்கும். 2021-ல் எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை அமைப்போம் என்றார்.

குறிப்பாக 11 பேர் குழுவில் ஈபிஎஸ் தரப்பில் 6, ஓபிஎஸ் தரப்பில் 5 பேர் இடம்பெற்றது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் பாரபட்சமின்றி ஒருமித்த கருத்துடன் தான் 11 பேர் கொண்ட அதிமுக வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios