கணினி போல் செயல்படும் திமுகவிடம் மனு கொடுத்தால் ரசீதுதான் தரும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் காணொலி வாயிலாக கட்சியினரிடையே உரையாற்றி வருகிறார். இதில், அதிமுகவின் ஊழல்கள் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

இது தொடர்பாக அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்;- ஆன்லைனில் அரசியல் நடத்தும் திமுகவினரால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. மேலும் கணினி போல் செயல்படும் திமுகவிடம் மனு கொடுத்தால் ரசீது தான் தரும். ஆனால் அதிமுக நேரடியாக பணியாற்றி மக்களிடம் நன்மதிப்பை பெற்று வருகிறது எனவும் கூறியுள்ளார்.