சென்னையில் இப்போது 6000 ஆக உள்ள சோதனைகளை 10000 ஆக அதிகரிக்க வேண்டும். அப்படியானால் 15 நாட்களுக்குள் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’சென்னையில் ஒரு நாளைக்கு 20,000 சோதனைகள் செய்யப்பட்டால் கொரோனா பரவலை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று மருத்துவ வல்லுனர்களாக உள்ள எனது நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால், அதற்குரிய கட்டமைப்புகள்  தமிழகத்தில் இல்லை என்று கூறப்படுகிறது.ஒரு நாளைக்கு 10000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் அடுத்த 15 நாட்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும் என்பதும் வல்லுனர்கள் கருத்து. அது சாத்தியம் தான் என்பதால் சென்னையில் இப்போது 6000 ஆக உள்ள சோதனைகளை 10000 ஆக அதிகரிக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் 1018 ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கு இணையான ஆங்கில உச்சரிப்புக்கு மாற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியா விடுதலை அடைந்து 73  ஆண்டுகளாகியும் இன்னும் விலகாத ஆங்கிலத் தன்மையை விரட்டும் இந்த முயற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.