பணத்தைக்கொண்டு வெற்றி பெறலாம் என்றால் டாடா பிர்லா கூட இந்தியாவில் 500 தொகுதிகளிலும் பணத்தை செலவழித்து வெற்றிபெற்று பிரதமர் ஆகி விடலாம்.,ஓபிஎஸ் நினைப்பதுபோல வரும் காலத்தில் அதிமுக வெற்றி பெற முடியாது என்றும் தங்க தமிழ்ச் செல்வன் கூறினார்.

தேனிக்கு புதிதாக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை நியமித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். அதன்பிறகு முதல்முறையாக தேனி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம். தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் பேசும் போது, "கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 90 இடங்களை பிடித்தது .அதிமுக 130 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தது.திமுக ஆட்சி அமைக்க ஒரு சதவீதம் ஓட்டுகள் தான் குறைவாக இருந்தது. தேனி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெறவில்லை. எனவே வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேனி மாவட்டத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் தெற்கு மற்றும் வடக்கு என இரண்டு மாவட்டமாக பிரித்திருக்கிறார்.

இங்கே கொரானா நோய்த்தொற்று காலத்தில் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் பணத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் வெற்றி பெறலாம் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அவரது மகனும் கனவு காண்டு வருகிறார்கள்.பணத்தைக்கொண்டு வெற்றி பெறலாம் என்றால் "டாடா பிர்லா" கூட இந்தியாவில் 500 தொகுதிகளிலும் பணத்தை செலவழித்து வெற்றிபெற்று பிரதமர் ஆகி விடலாம்.ஆனால் எல்லா காலமும் பணத்தைக்கொண்டு வெற்றி பெற்றுவிட முடியாது. எனவே ஓபிஎஸ் நினைப்பதுபோல வரும் காலத்தில் அதிமுக வெற்றி பெற முடியாது" என்றார்.