மதுரையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை மூட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் ஒரே குறிக்கோள் ஆக உள்ளது, படிப்படியாக பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடக்கப்பட்டது வருகிறது, பி.எஸ்.என்.எல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை, தொழில்நுட்ப பொறியாளர்களுக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டு உள்ளது, பி.எஸ்.எல்.எல் நிறுவனத்தை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது, தனியார் தொலை தொடர்பு நிறுவனத்துக்கு மத்திய அரசு அளிக்கும் ஊக்கத்தை பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு அளிக்கவில்லை, 

பி.எஸ்.என்.எல் நிறுவன சொத்துக்களை விற்பனை செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது, பீகார் தேர்தலில் நிதிஷ்க்குமார் முதல்வராக வர மாட்டார், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி, 2021 ல் திமுக - காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி  பெற்று ஆட்சி அமைக்கும், பாஜக, அதிமுக நிச்சயம் வெற்றி பெறாது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சேர்க்காமல் இருப்பது விசித்திரமாக உள்ளது, தமிழகத்தில் பாஜக எம்.பி இல்லாத காரணத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை குழுவில் எம்.பிக்கள் சேர்க்கவில்லை, மனு நிதி நூல் குறித்து பாஜக தான் தெளிவுப்படுத்த வேண்டும், திருமாவளவன் பேச்சு திரித்து பேசப்பட்டு வருகிறது, சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற கூடிய தொகுதிகளை கேட்க உள்ளோம், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு ஆய்வுநடத்தப்பட்டு வருகிறது, 

பாஜக ஒரு கூட்டணி சேர்ந்ததால் மைன்ஸ், காங்கிரஸ் ஒரு கூட்டணியில் சேர்ந்தால் பிளஸ், நடிகர் வடிவேலு பிரச்சாரத்திற்கு வரும்போது கூட்டம் வரும் அது வாக்காக மாறாது அதுதான் வரலாறு, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டி மாதிரி குஷ்பூ 4 வருடத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு கட்சிக்கு செல்கிறார், புதிதாக திமுக கூட்டணிக்கு ஒரிரு கட்சிகள் வரவுள்ளது, வெற்றி குறித்து பாஜகவுக்கு இருப்பது குருட்டு நம்பிக்கை, காங்கிரஸ்க்கு விஞ்ஞான நம்பிக்கை, கூட்டணியில் இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்கிற நிலை உள்ளது, காங்கிரஸ் கட்சியில் வரும் சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும், காங்கிரஸ் கட்சியில் சிறுபான்மையினருக்கு அதிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்" என அவர் கூறினார்.