if u want to come to dmk he can deside by stalin

நடிகர் ரஜினிகாந்த் திமுகவுக்கு வந்தால் வரவேற்பேன் என திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக புகைப்படம் எடுத்து வருகிறார்.

கடந்த 4 நாட்களாக இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து கடைசி நாளான இன்று அரியலூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். அப்போது அரசியலில் குதிப்பதை தீர்மானித்தது போல் பரபரப்பாக பேசினார்.

அதில் மு.க.ஸ்டாலின் என் நெருங்கிய நண்பர் எனவும், நல்ல திறமையான நிர்வாகி என சோ சொல்வார், அவரை சுதந்திரமா செயல்பட விட்டால் நன்றாக செயல்படுவார் என தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தனியார் செய்திதாள் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:

ஸ்டாலின் : நடிகர் ரஜினிகாந்த் என்னை நல்ல நண்பர் எனவும், திறமையாக கையாள்பவர் எனவும் கூறியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

செய்தியாளர் : ரஜினியை நீங்கள் திமுகவிற்கு அழைப்பீர்களா?

ஸ்டாலின் :அவருக்கு இஷ்டம்னா திமுகவுக்கு வரலாம். அவரை கட்டயப்படுத்தவில்லை. அவர் வருவதும் வராததும் அவரது சொந்த விருப்பம்.

செய்தியாளர் : அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள்தான் என ரஜினி கூறுகிறார். ஆனால் திமுகவை ஆதரிக்கிறேன் எனவும் கூறுகிறார்.?

ஸ்டாலின் : கடந்த 6 வருஷங்கள் தான் தமிழகத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

செய்தியாளர் : பா.ஜ.க. ரஜினியை கட்சிக்குள் இழுக்க மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்களே?

ஸ்டாலின் : பா.ஜ.க தமிழத்தில் கால் பதிக்க என்னென்னவோ முயற்சி செய்கிறது. ஆனால் அது எப்பொழுதுமே நடக்காது.

செய்தியாளர் : ஒ.பி.எஸ் மோடியை சந்திக்க டெல்லி போயுள்ளாரே?

ஸ்டாலின் : ஒ.பி.எஸ் ஆக இருந்தாலும் சரி இ.பி.எஸ்ஆக இருந்தாலும் சரி டெல்லி போறது அவர்கள் சொந்த வேலைக்காக தான் போறாங்க. மக்கள் நலனுக்காக போகவில்லை. தமிழகத்தில் ஹிந்தி, நீட் தேர்வு என எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. ஆனால் அதைப்பற்றி பிரதமரிடம் அவர் பேசுவதில்லை. ஒ.பி.எஸ் எப்பொழுது தமிழகம் வருகிறாரோ அவரிடம் கேளுங்கள்.

செய்தியாளர் : தமிழகத்தில் தேர்தல் முன்கூட்டியே வருமா?

ஸ்டாலின் : தேர்தல் முன்கூட்டியே வந்தாலும் சரி வரவில்லை என்றாலும் சரி தேர்தலை சந்திக்க திமுக தயாராகவே உள்ளது.