If TTV Dinakaran party starts I will not - Vetrivel

டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தால் இணையமாட்டேன் என்று தங்க தமிழ்செல்வன் கூறியிருந்த நிலையில், வெற்றிவேலும் தினகரன் கருத்துக்கு எதிராக கூறியுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக கட்சியும் சின்னமும் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். அணிக்கு சென்றதை அடுத்து, டிடிவி தினகரன் தனி கட்சி தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. அது குறித்த அறிவிப்பு கடந்த 17 ஆம தேதி அன்று தினகரன் அறிவிக்கவிருந்ததாகவும் கூறப்பட்டது. 

டிடிவி தினகரன் கட்சி ஆரம்பிப்பதாக வந்த செய்தியை அடுத்து, தினகரன் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனை அடுத்து, புதிய கட்சி என்ற திட்டத்தை தினகரன் தற்போதைக்கு கைவிட்டுள்ளார். 

தினகரன் தனிக்கட்சி தொடங்கினால், கட்சியில் சேரமாட்டேன் என்றும், அதிமுகவின் உறுப்பினராகவே இருப்பேன் என்றும், அவரது ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியிருந்தார். மேலும் அதிமுகவின் உறுப்பினராகவே இருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தால் கட்சியில் சேரமாட்டேன் என்று கூறியுள்ளார்.

தினகரனின் கருத்துக்கு எதிராக தங்க.தமிழ்செல்வன் கருத்து கூறியிருந்த நிலையில், வெற்றிவேலும் கருத்து தெரிவித்திருப்பது சலசலப்பைத் ஏற்படுத்தி உள்ளது.