If there were Jayalalitha I would be a minister - MLA Karunas
ஜெயலலிதா ஒரு வாரம் கழித்து அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்திருந்தால், நான் அமைச்சராகி இருப்பேன் என்று எம்.எல்.ஏ. கருணாஸ் கூறினார்.

நேற்று தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கருப்பு சட்டை அணிந்து திமுகவினர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு காரணமாக அவை ஒத்திவைப்பு தீர்மானத்தை வழங்கினார். அந்த தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்ததால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் திமுகவின் மாதிரி சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. மாதிரி சட்டப்பேரவையின் சபாநாயகராக சக்கரபாணி இருந்தார். திமுக எம்எல்ஏ, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் கலந்து கொண்ட முக்குலத்தோர் புலிப்படை சட்டப்பேரவை உறுப்பினர் கருணாஸ் பேசுகையில், நேற்று தமிழக அரசு சார்பில் கூட்டப்பட்ட சட்டப்பேரவைக் கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
தமிழக முதலமைச்சராக இருக்கும் ஒருவர் துப்பாக்கிச்சூட்டை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று கூறுகூது எவ்வளவு பெரிய கேவலம். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை விரைவில் கலைத்துவிட்டு ஸ்டாலின் தலைமையில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், மறைந்த ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவன்தான் நான். ஆனால், மக்கள் பிரச்சனைகள் பேசுவதற்கு நேற்று எனக்கு அனுமதி அளிக்கவிலை.
ஜெயலலிதா மட்டும் ஒரு வாரம் கழித்து அப்போலோவில் சேர்ந்திருந்தால் நான் அமைச்சராகி இருப்பேன் என்று கருணாஸ் தெரிவித்தார்.
