Asianet News TamilAsianet News Tamil

ஆள் இல்லை என்றால் அந்தமானில் இருந்து 50 பேரை கூட்டி வந்திருப்பேன்... ராமதாஸ் வேதனை..!

10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

If there was no man, I would have gathered 50 people from the Andamans ... Ramadoss pain ..!
Author
Tamil Nadu, First Published Nov 25, 2021, 6:07 PM IST

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடாமல் இருந்தது மிகவும் வேதனை அளித்தது. ஆட்கள் இல்லை சொல்லி இருந்தால் அந்தமானில் இருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்து இருப்பேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்

.If there was no man, I would have gathered 50 people from the Andamans ... Ramadoss pain ..!

பா.ம.க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று கடலூரில் நடைபெற்றது. அப்போது பேசிய ராமதாஸ், ’’10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பான வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது. எனவே, தடை உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் தேர்தலில் பா.ம.க வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வராக கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும். இதற்காக திண்ணை பிரசாரம், சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி மக்களிடையே செல்ல வேண்டும்.

23 லட்சம் ஓட்டுகள் போட்டு 5.6 சதவீதம் பெற்றதாக கூறுகின்றனர். தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக இருப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த கட்சி இனி இளைஞர்களின் கைகளில் தான் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட ஆள் இல்லை என்கின்றனர். ஆளில்ல என்றால் அந்தமானில் இருந்து 50 பேரை அழைத்து வந்திருப்பேன். உள்கட்சி பிரச்சனையால்தான் கடலூர் மாவட்டத்தை இழந்தோம். கட்சிக்கு ஓட்டு வாங்கி தர முடியாவிட்டால், மாடு மேய்க்கும் சிறுவன் தான் மாவட்ட, ஒன்றிய பொறுப்புகளுக்கு நியமிக்க வேண்டி இருக்கும்.

If there was no man, I would have gathered 50 people from the Andamans ... Ramadoss pain ..!

நம்மிடம் போதிய சக்தி இல்லாததால், ஏதேனும் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் சொன்னதால்தான், மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்ததாகவும், திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பாமகவுக்கு குழி பறித்து விட்டதாக, ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios