Asianet News TamilAsianet News Tamil

எப்பா.. துரைமுருகன் மீது சீமானுக்கு இவ்வளவு பாசமா..?? திமுகவை பகிரங்கமாக எச்சரித்த நாம் தமிழர் கட்சி.

யூடியூபர் சாட்டை துரைமுருகன் தமிழக முதலமைச்சரை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

If there issue for Thuraimurugan we are all with him .. nam  Tamil party who warned DMK.
Author
Chennai, First Published Oct 11, 2021, 1:36 PM IST

யூடியூபர் சாட்டை துரைமுருகன் தமிழக முதலமைச்சரை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலக தலைமை நிலைய செயலாளர் திரு.செந்தில்குமார் பெயரில் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை கொள்ளையடித்து கொண்டு செல்வதை கண்டித்து நேற்று 10-10-2021 கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசியதற்காக தமிழ்தேசிய ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருக்கும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.

If there issue for Thuraimurugan we are all with him .. nam  Tamil party who warned DMK.

இதையும் படியுங்கள்:  அடி தூள்.. அதிமுக அவைத்தலைவர் இவர்தானா.?? இன்று ஓபிஎஸ், இபிஎஸ் முக்கிய முடிவு.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பழிவாங்கும் போக்கோடு பொய்யாக குற்றஞ்சாட்டி வழக்கு புனைந்து சிறைப்படுத்தி இருக்கும், கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலை ஒருபோதும் ஏற்க முடியாது. சாட்டை துரைமுருகன் தற்போதைய சூழலில் கட்சியை விட்டு நீக்கி அவரை கைவிட்டது போல கட்சியின் கடிதத்தை போலியாக உருவாக்கி, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவது மிக இழிவான அரசியல் ஆகும். இத்தருணத்தில் அவர் இவ்வழக்கில் இருந்து மீண்டு வரவும் சிறையிலிருந்து வெளி வரவும் நாம் தமிழர் கட்சி அவருடைய முழுமையாகத் துணை நிற்கும் என தெரியப்படுத்துகிறோம். என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

If there issue for Thuraimurugan we are all with him .. nam  Tamil party who warned DMK.

இதையும் படியுங்கள்: 15 வயது மாணவனுடன் 41 வயது டீச்சருக்கு ஏற்பட்ட பயங்கர காதல்... அடிக்கடி உடலுறவு... கர்ப்பம், விசாரணையில் பகீர்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடந்த போராட்டத்தின்போது கலந்துகொண்டு பேசிய சாட்டை துரைமுருகன்  தமிழகத்தில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடித்து கேரள துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது, கேரளாவில் துறைமுகம் அமைக்க தமிழகத்தின் மலைகள் உடைக்கப்படுகிறது, ஒரு அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவன் அங்கு முதல்வராக இருக்கிறார், ஆனால் இங்கு அப்படி இல்லை என மிக மோசமான வார்த்தைகளால் சாட்டை துரைமுருகன் பேசினார். இந்நிலையில் அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்த போலீசார், கலவரத்தை தூண்டுதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios