அதிலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதுதான். இதனைக் காணும்போது எங்கள் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் ஏன் நேர்மையான ஆட்சியை முன்னிறுத்தி இந்த கட்சியை ஆரம்பித்தார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். 

நேர்மையான அரசு இருந்தால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்யலாமென மக்கள் நீதி மையத்தின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முழுவிபரம் பின்வருமாறு:- ஆளும் அரசுகளுக்கு எதிராக நெஞ்சம் நிமிர்த்தி நேர்மைக்கு குரல் கொடுக்கும் அரப்போர் இயக்கம் அன்மையில் மக்களிடம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில், அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்துதான் காரியம் ஆற்ற வேண்டி உள்ளது என்று 93 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யார் ஆட்சி செய்தாலும் இந்த அரசு லஞ்ச புற்றாகவே இருக்கிறது என்ற உண்மையை இந்த அறிக்கை நமக்கு சொல்கிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதிலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள் என்பதுதான். இதனைக் காணும்போது எங்கள் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் ஏன் நேர்மையான ஆட்சியை முன்னிறுத்தி இந்த கட்சியை ஆரம்பித்தார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். மக்கள் வரிப்பணம் பாழாவது, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறுவது, பொது நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவது, அரசின் கட்டுமானங்கள் அற்பாயுளில் இடிந்து விழுவது, இவை எல்லாமே லஞ்சம் என்ற அரக்கனின் கோர விளையாட்டுகளே. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் எங்கள் தலைவர் பேசும்போது மக்களைப் பார்த்து நீங்கள் நேர்மையான அரசு அமைக்க வாய்ப்பு கொடுங்கள், அந்த அரசால் வரும் வருமானத்தில் இரண்டு தமிழகத்தை நிர்வாகம் செய்ய முடியும் என்று கூறினார்.

வந்த முடிவுகள் வேறு ஆனாலும் இந்த அரசின் புரையோடிப் போயிருக்கும் ஊழலை அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்ற செய்தியை அறப்போர் இயக்கம் மூலம் அறியும் போதே காலம் மாறும், மக்கள் மனது மாறும் என்பதை உணர முடிகிறது. சீரழிந்து கிடக்கும் நிர்வாகத்தை மக்களின் வாக்கு தான் மாற்றியமைக்க முடியும் என்பதை உணர்ந்து, வருங்காலங்களில் அதற்கான நடவடிக்கைகளில் மக்கள் இறங்குவார்கள் என்ற நம்பிக்கை மக்கள் நீதி மையத்திற்கு உண்டு என்பதால் அதன் பாதையில் தொடர்ந்து எழுச்சியுடன் செயல்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் கூறியுள்ளார்.