Asianet News TamilAsianet News Tamil

விவசாயிகள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது... பாஜக தலைமையை அதிர வைத்த ஆளுநர்!

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று மேகாலயா ஆளுநரும் அக்கட்சியைச் சேர்ந்தவருமான சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். 
 

If the farmers' demand is not fulfilled, the BJP will not come to power again .. The governor who shook the BJP head!
Author
Rajasthan, First Published Oct 18, 2021, 9:00 PM IST

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கடந்த ஆண்டு முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டமே இன்னும் முடிவுக்கு வராத சூழலில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீதுபாஜகவினர் கார் ஏற்றி கொன்றதாக எழுந்த விவகாரம் தேசிய அளவில் எதிரொலித்தது. இதைக் கண்டித்தும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

If the farmers' demand is not fulfilled, the BJP will not come to power again .. The governor who shook the BJP head!
ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் சத்யபால் மாலிக் பங்கேற்றார்.  அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்தால் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வாய்ப்புள்ளது. ஒரு வேளை விவசாயிகளின் கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றாவிட்டால் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது.If the farmers' demand is not fulfilled, the BJP will not come to power again .. The governor who shook the BJP head!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சத்யபால் மாலிக், பாஜகவில் நீண்ட நாள் தலைவர். பாஜக ஆட்சிக்குப் பிறகு கோவா, ஜம்மு காஷ்மீர், பீகார், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் ஆளுநராக இருந்த அவர், தற்போது மேகாலயா ஆளுநராக இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவைப் பற்றி ஆளுநர் ஒருவர் கருத்து கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆளுநராக இருப்பவர்கள் அரசியல் பேசக் கூடாது என்பது மரபு. அதையும் தாண்டி சத்யபால் மாலிக் பேசியிருப்பது அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios