எனவே கனியை ஓரம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2000 இளம்பெண்கள் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பெண்களை மகளிர் அணியில் சேர்க்காமல் இளைஞரணியில் சேர்த்திருப்பது கனிமொழிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் தன்னை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் உதயநிதியை கனிமொழியை எதிர்த்துதான் ஆகவேண்டும் என பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் கூறியுள்ளார். இல்லையென்றால் அரசியல் களத்தில் கனிமொழி இருக்கும் இடம் தெரியாமல் அழைக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். அழகிரியைப் போலவே கனிமொழியையும் அரசியலிலிருந்து ஓரம் கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக அதிரிபுதிரியாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் , அதை உறுதி படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருவதாக அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி கைப்பற்றியுள்ள நிலையில் அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி திட்டங்களை அரசு அறிவித்து வருகிறது.
கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும்கூட பிரச்சனைகளை சமாளித்து, மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்திவருகிறது ஸ்டாலின் அரசு. இது ஒரு புறமிருக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை எதிர்கட்சிகளான அதிமுக பாஜக கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதே நேரத்தில் ஸ்டாலின் அரசியல் உள்நோக்கத்துடன் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்கிறார் ஸ்டாலின் என எதிர் கட்சிகள் ஒரு புறம் குற்றஞ்சாட்டி வருகின்றன. தற்போது அதே குற்றஞ்சாட்டு கட்சிக்குள்ளாகவும் எழத் தொடங்கியுள்ளது. கருணாநீதியால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட அவரின் அன்புமகள் கனிமொழியை மகனுக்காக கட்சித் தலைமை கட்டம் கட்டுகிறது என்பதுதான் அது. கருணாநிதியின் அரசியல் வாரிசுகளான ஸ்டாலினும், கனிமொழியும் இருந்து வரும் நிலையில், மொத்தமாக கனிமொழியை ஓரம் கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கனிமொழியின் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் சிலர், கலைஞரின் மறைவுக்குப் பின்னர் கனிமொழி அரசியல் இருந்து ஓரம் கட்டுவதற்கான முயற்சிகள் வேகமாக நடந்து வருவதாக கூறுகின்றனர். ஏற்கனவே அழகிரி ஓரங்கட்டப்பட்டுவிட்ட நிலையில் அடுத்து கனிமொழிக்குதான் கட்டம் கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக கூறுகின்றனர். ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதி ஸ்டாலினை முன்னிலை படுத்துவதற்கான முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் கனிமொழியை ஓரங்கட்டும் படலம் ஆரம்பித்து விட்டது என்கின்றனர். கனிமொழி ஒன்று வடக்கே டெல்லியில் இருக்க வேண்டும், இல்லையென்றால் தெற்கே தூத்துக்குடியில் இருக்க வேண்டும். அவர் ஒருபோதும் சென்னையில் சங்கமித்து விடக்கூடாது என்பதில் தலைமை கவனமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
மின்னல் வேகத்தில் உதயநிதி:-
உதயநிதி அரசியலுக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே ஸ்டாலின் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன்வசம் வைத்திருந்த திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. பின்னர் பதவியேற்ற சில நாட்களிலேயே மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு கை கொடுத்தது உதயநிதி மேற்கொண்ட பிரச்சாரம்தான் என பலரும் பேசும் அளவிற்கு அவரின் செயல்பாடுகள் அதில் இருந்தது. அதாவது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் நின்று அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது அவருக்கு அமைச்சரவையில் பதவி வழங்க வேண்டும் என கட்சியில் சீனியர்களே கோரிக்கை வைக்கும் அளவுக்கு அவரது செல்வாக்கு பன் மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ஸ்டாலினுக்குப் பிறகு அந்த இடத்திற்கு கனிமொழி வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தலைமை, அந்த இடத்திற்கு உதயநிதியை தூக்கி வந்து நிறுத்தும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

எனவே கனியை ஓரம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2000 இளம்பெண்கள் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பெண்களை மகளிர் அணியில் சேர்க்காமல் இளைஞரணியில் சேர்த்திருப்பது கனிமொழிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதே விஷயங்களுக்கு இதுவரை ரியாக்ட் செய்யாமல் கனிமொழி சைலன்ட் மோடில் இருந்துவருகிறார். இந்நிலையில் அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான சவுக்கு சங்கர் கனிமொழி ஓரம் கட்டப்படுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அவர் பகிரங்கமாக உதயநிதி ஸ்டாலினை எதிர்த்தால், அவருக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும் என கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :-
கடந்த ஒரு மாதமாக கனிமொழி ஓரம் கட்டுவது தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதை சரி செய்வதற்கு அல்லது அது பூதாகரமாக வெடிப்பதை தடுப்பதற்கு இதுவரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெளிப்படையாக கனிமொழி ஓரம் கட்டப்படும் நிலைமை ஏற்பட்டால் தற்போது இருக்கிற அமைச்சர்கள் கனிமொழியின் பக்கம் நிற்பார்கள் என்றும் கூற முடியாது. பிடிஆரை தவிர மீதி அனைவரும் சம்பாதிப்பதற்காக வந்தவர்கள்தான், அதனால் ஒவ்வொருவரும் அமைச்சர் பதிவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனால்தான் அவரின் பிறந்தநாளின்போது கூட கனிமொழியை வீட்டில் சென்று ரகசியமாக சந்தித்து விட்டு வந்து இருக்கிறார்களே தவிர ஒருவர்கூட அவருக்கு வெளிப்படையாக வாழ்த்து கூறவில்லை.

தங்களது பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கனிமொழியின் படத்தைக்கூட அமைச்சர்கள் போடுவது இல்லை, ஆனால் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் மட்டும் பெரிதாக போடப்படுகிறது. கனிமொழியை தனிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் திமுகவின் மூத்த அமைச்சர்களுக்கு ஒருபோதும் இல்லை, ஆனால் தனது அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்காக உதயநிதியை சந்தோஷப்படுத்த சில காரியங்களை அவர்களும் செய்கிறார்கள். கனிமொழி அவர்களின் பிறந்தநாளுக்கு கூட வெளிப்படையாக வாழ்த்து சொல்ல முடியாத அளவிற்குதான் கட்சியில் நெருக்கடி இருக்கிறது. கனிமொழியின் பிறந்த நாளன்று உதயநிதி ஏன் தனது அத்தைக்கு ஒரு வாழ்த்துகூட சொல்லவில்லை? டுவிட்டரில்கூட ஒரு வாழ்த்து செய்தி கூட அவர் ஏன் பதிவிடவில்லை? மொத்தத்தில் தற்போதுள்ள நிலையில் உதயநிதியை கனிமொழி எதிர்த்தால் அவருக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும். பரவாயில்லை, இதையெல்லாம் நான் கண்டுகொள்ள மாட்டேன் என அவர் இருந்தால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் அவரது அரசியல் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
