நடிகர் கமல் தேர்தலில் போட்டியிட்டால், நான் அவரை எதிர்த்து போட்டியிட மாட்டேன் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நடிகர் கமல், கடந்த சில நாட்களுக்கு முன், தமிழக அரசில் ஊழல் பெருகிவிட்டது என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர்கள் பல்வேறு போட்டி அளித்து வருகின்றனர். மேலும், அவருக்கு மிரட்டல் விடும் விதமாகவும் பேசி வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

அதேபோல் கமல்ஹாசன், “நான் முதல்வர்” என குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். இதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழக மாநில தலைவர் தமிழிசை ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பேட்டியளித்தனர். இதனால், நடிகர் கமலின் பிரச்சனை விஸ்ரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் கமல் அரசியலுக்கு வருவதுபோல் பேசி வருகிறார். அவர் அரசியலுக்கு வந்தால், நான் வரவேற்கிறேன். கமல் போட்டியிடும் தொகுதியில், அவரை நான் எதிர்த்து போட்டியிட மாட்டேன்.

கமல் என்ன சிந்தனையுடன் பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை. அவரது மனதில் என்ன இருக்கிறது என்பதனை அவர் தெளிவுபடுத்த வேண்டும். அவர் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதையும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். ஆர்.கே. நகர் தொகுதியில் கமல் போட்டியிட்டால் தனிப்பட்ட நபராக நான் போட்டியிடமாட்டேன்.

திமுகவுக்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதறக்க, எதையாவது செய்து வருகிறது. அரசுக்கு எதிராக யார் பேசினாலும், அவர்ககளை அதரித்து வருகிறது. திமுக ஆட்சியை பிடிப்பதற்காக ஏதாவது ஒரு கொடியை பிடித்து தொங்கி மேலே வர பார்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.