பொய்களைச் சொல்லி ஓட்டு கேட்டு வரும் திமுகவினரை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேசியுள்ளார். அதற்கு மகளிர் அணியினர் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியில் கட்சிகற் அதை எதிர் கொள்ள தயாராகி வருகின்றன. யாருடன் கூட்டணி அமைப்பது என்ற வியூகங்களிலும் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஜினி ஆரசியல் வருகையில் இருந்து பின்வாங்கியுள்ளதால். வழக்கம் போல இந்த தேர்தலிலும் அதிமுக- திமுகவுக்கும் இடையே நேரெதிர் போட்டி நிலவும் சூழல் உள்ளது.

 

எனவே அதிமுக-திமுக இரண்டு கட்சிகளுமே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி ஒருவரை மாற்று ஒருவர் தாக்கியும் விமர்சித்து வருகின்றன. இதனால் அரசியில்க்களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் நாகப்பட்டினம் நகர மகளிர் பூத் குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன்  அதிமுக இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேசியதாவது:  எடப்பாடியாரின் அரசு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்த திட்டங்கள் மட்டுமல்லாது மேலும் பல எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. 

வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியின் இந்த சாதனைகளை மகளிர் குழு உறுப்பினர்கள் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார். ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய்தான் வருகிறது. திமுகவினர் ஓட்டு கேட்டு வந்தால் ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். இது தாய்க்குலங்களால் மட்டுமே முடியும்.  இங்கு கூடியிருக்கும் மகளிர்கள் கூட்டத்தை பார்த்தாலே தெரிகிறது வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி அரசு தான் மீண்டும் ஆட்சி அமைக்கும். அதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.