If Rajini comes to politics when the fans want to do it good will happen! Actor Mayilsamy

ரசிகர்கள் விரும்பும் இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும் என்று நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்.

நடிகா் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் ரசிகா்களுடனான சந்திப்பு ஒன்றை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரஜினி மன்றர் ரசிகா்களை அழைத்து அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது பேசிய ரஜினிகாந்த், சிஸ்டம் கெட்டுப்போய்விட்டது, என்று தமிழக அரசியல் குறித்து பேசினார். அவரின் இந்த பேச்சு பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அப்போதே ரஜினி அரசியலுக்கு வருவது தொடா்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலா படம் மற்றும் 2.0 படப்பிடிப்பு பணிகளுக்காக வெளிநாடு சென்று விட்டார்.

இந்த நிலையில், ரஜினிகாந்த், ரசிகர்களுடனான தனது இரண்டாம் கட்ட சந்திப்பை இன்று தொடங்கியுள்ளார். இந்த சந்திப்பு வரும் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்து வருகிறார்.

ரசிகர்கள் சந்திப்புக்கு முன்னதாக ரஜினி பேசும்போது, தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு இம்மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என்றார். மக்களைவிட ஊடகங்களே, எனது அரசியல் பிரவேசம் குறித்து அதிக ஆர்வத்தில் உள்ளதாக கூறியிருந்தார். ரஜினி ரசிகர் சந்திப்பு விழாவில் தயாரிப்பாளர் கலைஞானம், இயக்குநர் மகேந்திரன் கலந்து கொண்டனர். ரஜினி வீட்டில் சுக்ரன் உட்கார்ந்துள்ளார் என்று கலைஞானரும், நிதானமாக இருப்பவர்களால்தான் சாதனை படைக்க முடியும்; அந்த நிதானம் ரஜினியிடம் அதிகம் உண்டு என்று மகேந்திரன் கூறினார்.

இந்த நிலையில் நடிகர் மயிலாசாமி, நடிகர் ரஜினி குறித்து பேசியுள்ளார். அதாவது ரசிகர்கள் விரும்பும் இந்த தருணத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால், நல்லது நடக்கும் என்று கூறியுள்ளார். மேலும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து தாமதம் ஏற்படுத்துவதால் எந்த தவறும் இல்லை என்றும் மயில்சாமி கூறியுள்ளார்.