தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கிற வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அதை செய்ய தவறுவார்களேயானால், தந்தை பெரியாருக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தார்கள் என்கிற பழி அதிமுக  மீது சுமத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... 'திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி களங்கப்படுத்தியிருப்பது வகுப்புவாத சக்திகளின் வெறிச் செயலாகவே நிகழ்ந்திருக்கிறது. இதை தமிழக காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய குற்றங்களை செய்தவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிற வகையில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.  இதை தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு நிச்சயம் முறியடிப்பார்கள் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. தமிழகம் ஒருபோதும் மதவாத சக்திகளின் ஆதிக்கத்தை அனுமதிக்காது.
எனவே, தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கிற வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அதை செய்ய தவறுவார்களேயானால், தந்தை பெரியாருக்கு இழைக்கப்பட்ட மன்னிக்க முடியாத குற்றத்தை செய்தார்கள் என்கிற பழி அதிமுக  மீது சுமத்தப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன்.