புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறை என 
முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட உள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிகைகளை  அடுத்து வருகிறது இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவுரையை ஏற்று நேற்றுமுன்தினம் நாடுதழுவிய சுயஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் மாலை 5 மணிக்கு மேல் மக்கள் பொது இடங்களில் அதிக அளவில் ஒன்று கூடினர்.

இதனால் பெரும்பாலான மாநிலங்கள் தங்களது மாநில எல்லைகளை மூடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் ஒரு நபர் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக நேற்று மாலையில் இருந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். மேலும் மதுபான கடைகள் மூடுவதாகவும் முதல்வர்  நாராயணசாமி தெரிவித்திருந்தார்.


 
அதேவேளையில் அத்தியாவசிய பொருட்ககளான மருந்து, மளிகைக்கடை, பால்  போன்றவை தங்கு தடையின்றி  கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று ஆபத்தை அறியாமல் ஊடரங்கு உத்தரவை பெரிதாக மக்கள் எடுத்துக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலின் நிலை 2-ம் கட்டத்தில் உள்ளது, சமூக பரவல் என்ற 3-ம் கட்டத்திற்கு உயர்ந்தால் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்படும்.  ஆகையால், ஊடரங்கு உத்தரவை மீறி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.