அமித்ஷா இது தேவையா..? என் பேச்சை கேட்டிருந்தால்.. மகாராஷ்டிராவை பாஜக ஆண்டிருக்கலாம்.. குமுறும் உத்தவ்.
ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்து கொள்ளலாம் என நான் சொன்னதை அன்று அமித்ஷா கேட்டிருந்தால் இன்று மகாராஷ்டிராவை பாஜக ஆண்டிருக்கலாம் என உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்துள்ளார்.
ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்து கொள்ளலாம் என நான் சொன்னதை அன்று அமித்ஷா கேட்டிருந்தால் இன்று மகாராஷ்டிராவை பாஜக ஆண்டிருக்கலாம் என உத்தவ் தாக்கரே வேதனை தெரிவித்துள்ளார். அன்று அமித்ஷா ஒப்புக்கொண்டிருந்தால் மகா விகாஸ் அங்காடி என்ற அமைப்பே தோன்றி இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா பாஜக கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றன. ஆனால் யார் முதல்வர் என்ற போட்டியில் இரு கட்சிகளுக்கும் இடையே முறிவு ஏற்றபட்டது. பின்னர் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து "மகா விகாஸ் அகாடி" என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தது. உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். ஆனால் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் உடனான கூட்டணியை சிவசேனாவின் சில எம்எல்ஏக்கள் விரும்பவில்லை, இந்நிலையில் சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் உத்தவ் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முப்பையே விட்டு வெளியேறினர்.
இதையும் படியுங்கள்: SP Velumani: எஸ்.பி வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்.!
அவர்கள் அசாம், கவுகாத்தி போன்ற இடங்களில் தங்கி வந்தனர். இதனால் உத்தவ் தாக்கரே பெரும்பான்மை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது, அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் ஆகியுள்ளார். ஆனால் தற்போதும் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக முடியவில்லை, இந்த மனக் குறை பாஜகவினர் மத்தியில் இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: பள்ளி வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள்? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு..!
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் நான் பால் தாக்கரேவின் கனவை நிறைவேற்றி இருக்கிறேன். எனக்கு ஆதரவு நல்கிய காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு நன்றி. நீங்கள் பால் தாக்கரேவின் மகனை வீழ்த்தியுள்ளீர்கள். எனவே நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் போதே இருவரும் வெற்றி பெற்றால் ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்து கொள்ளலாம் எனக் கூறினேன்.
ஆனால் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அமித்ஷா அதை ஓப்புக் கொள்ளவில்லை. அன்று நான் கூறியதை மட்டும் அமித்ஷா கேட்டிருந்தால் "மகா விகாஷ் அகாடி என்ற கூட்டணியே ஏற்பட்டிருக்காது. இன்று பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருந்நிருக்கலாம். பாஜக அன்று என் கோரிக்கையை ஏற்றிருந்தால் தற்போது மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சியைத் தடுத்திருக்க முடியும். இப்போது அமைந்துள்ள அரசும் சிவசேனா அரசுதான் என்று அழைக்கப்படுகிறது, ஆனால் அது சிவசேனா அரசு அல்ல, எனக்கு அன்று அமித்ஷா ஒத்துழைத்திருந்தால் இன்று சிவசேனாவின் பெயரில் நடக்கும் அரசுக்கு மாற்றாக பாஜகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராகி இருந்திருக்க முடியும்.
நான் அப்போது பாஜகவுடன் அதிகாரப்பூர்வ கூட்டணியில் இருந்தேன் என அவர் ஆதங்கம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மும்பையில் சர்ச்சைக்குரிய மெட்ரோ கார் செட் திட்டத்தை மகா விகாஸ் அகாடி அரசாங்கம் எடுத்த முடிவு என்பதால் அதை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு மாற்றி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. என் மீதுள்ள கோபத்தை மும்பை வாசிகள் மீது காட்டாதீர்கள். தயவுசெய்து மெட்ரோ சிட்டி திட்டத்தை மாற்றி விடாதீர்கள், மும்பையை பழிவாங்கிவிடாதீர்கள், அதன் எதிர்காலத்தில் விளையாடாதீர்கள் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.