டிடிவி தினகரனை அரசியலில் அனாதையாக்கும் வரை ஓயமாட்டேன் என அக்காட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான பெங்களூரு புகழேந்தி சூளுரைத்துள்ளார்.

 

 

 

ஏற்கனவே டிடிவி தினகரனிடம்  நெருக்கமாக இருந்தன முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கதமிழ்செல்வன், செந்தில் பாலாஜி உள்ளிட்ட இன்னும் சில முன்னணி தலைவர்கள் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டனர், ஆரம்பத்தில் ஒஹே வென்று இருந்து அமமுகவின் கூடாரத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சொந்த கட்சிக்கே சூனியம் வைக்கிறார் தினகரன் என்பதுதான்  குற்றச்சாட்டு.  இந்நிலையில் டிடிவி தினகரனுக்கும், சசிகலாவுக்கும் நம்பிக்கைக்குரியவராக இருந்த பெங்களூரு புகழேந்தியும் இப்போது அதே குற்றச்சாட்டை முன் வைக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு புகழேந்தியை சந்தித்த அவரது ஆரதவாளர்கள் சிலர்,  டிடிவி தினகரனைப் பற்றி புகழேந்தி பேசியதை வீடியோ எடுத்து அதை தொலைக்காட்சிகளுக்கு லீக் செய்து விட்டனர். அதாவது அரசியலில்  ஒரங்கட்டப்பட்டு கிடந்த டிடிவி தினகரனை அரசியலில் ஒரு தலைவராக உருவாக்கியதே தான்தான் என புகழேந்தி டிடிவி தினகரனை மட்டந்தட்டி பேசும் வீடியோதான் அது. அந்த வீடியோ தான் தற்போது அமமுகவில் தற்போது ஏறபட்டுள்ள குழப்பத்திற்கு காரணம். இந்நிலையில் டிடிவி தினகரனுக்கும்  பெங்களூர் புகழேந்திக்கும் இடையே மன சஞ்சலத்தை ஏற்படுத்தியதுடன், பின்னர் அது விரிசலாகி இப்போது மோதலாக வெடித்துள்ளது.

 

இதனால் கட்சியிலிருந்து புகழேந்தியை டிடிவி கழற்றிவிடப்போகிறார், அல்லது புகழேந்தியே  கட்சியை விட்டு வெளியேறிவிடுவார் என்று சொல்லிவரும் நிலையில் இந்த இரண்டுமே நடைபெற வில்லை. சசிகலாவிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் புகழேந்தி என்பதே அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.  இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த புகழேந்தி, அமுமுக கட்சிக்காக என்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து கட்சியை வளர்த்தவன் நான்.  என்னை திட்டம் போட்டு வீடியோ எடுத்து அதை வெளியிட்டுள்ள கீழ்த்தரமான அந்த பிறவிகள் சொல்வதைக் கோட்டு  தலையாட்டுகிறார் தினகரன். என்னை போட்டுகொடுத்த சம்பவத்திக்கு பிறகு,  என்னை வீடியோ எடுத்த நபர்கள் டிடிவி தினகரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். உள்ளபடியே டிடிவி எவ்வளவு கேடுகெட்டவர் என்பதையே இச்செயல்காட்டுகிறது.

 

ஒரு நல்ல தலைவனாக இருந்தால் அவர் என்ன செய்திருக்க வேண்டும்?, கட்சிக்காக உழைத்த புகழேந்தியை ஏன் இப்படி வீடியோ எடுத்துள்ளீர்கள் என்றல்லவா அவர்களை எச்சரித்திருக்க வேண்டும்... ஆனால் டிடிவி தினகரன் அப்படி செய்யவில்லையே, அந்த ஈனர்களுக்கு,  சிவப்பு கம்பளம் போட்டுல்லவா வரவேற்றிருக்கிறார். எனக்கு எதிரான இச்சதியில் அவருக்கும் பங்கிருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது. என்று தன் ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார் புகழேந்தி. என்னை அவமானப்படுத்தி அரசியலில்  இருந்து  ஒரங்கட்ட நினைக்கும் டிடிவி தினகரனை இனி விடப்போவதில்லை. எத்தனை  விலைகொடுத்தேனும் செய்யவேண்டியதை செய்து, அவரை அரசியிலில் அனாதையாகாக்காமல் இனி ஒயமாட்டேன். அவரின் மொத்த ஜாதகமும்  தன்னிடத்தில் உள்ளது  என பக்காவாக எச்சரிக்கிறார் அவர்.