Asianet News TamilAsianet News Tamil

அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றிபெறுவேன்.. சைதையில் அதிமுகவுக்கு டப் கொடுக்கும் மா.சு.

இந்த தேர்தலில் நிச்சயம் சைதாப்பேட்டை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார். அதிமுக-பாஜக தோல்வி பயத்தில் வருமான வரி சோதனை நடத்தி வருகிறது. 

I will win again by a large margin of votes.. Dmk Candidate M.Subramaniyam Changeling ADMK.
Author
Chennai, First Published Apr 3, 2021, 12:11 PM IST

சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மீண்டும் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் மா. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற  தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ளநிலையில் அதை  எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக-திமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில்  முன்னாள் மேயர் சைதை துரைசாமியும்,  திமுக சார்பில் சென்னை முன்னாள் மேயரும் தற்போதைய சைதை சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்ரமணியம் களத்தில் உள்ளனர். 

I will win again by a large margin of votes.. Dmk Candidate M.Subramaniyam Changeling ADMK.

இருவருமே தொகுதியில் அதிக செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் திமுக சைதாப்பேட்டை வேட்பாளர்  மா. சுப்பிரமணியம் சென்னை ஜாபர்கான்பேட்டை, மேட்டுப்பாளையம், அண்ணாமலை சாலை, காமராஜர் தெரு உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது  பேசிய அவர், 

I will win again by a large margin of votes.. Dmk Candidate M.Subramaniyam Changeling ADMK.

சைதாப்பேட்டையில் செல்லும் இடமெல்லாம் திமுகவிற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.  திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த இருக்கும் 505  உறுதிமொழி மற்றும் 7 வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த தேர்தலில் நிச்சயம் சைதாப்பேட்டை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என தெரிவித்தார். அதிமுக-பாஜக தோல்வி பயத்தில் வருமான வரி சோதனை நடத்தி வருகிறது. அவர்களின் எந்த நடவடிக்கையும்  எங்களிடத்தில் எடுபடாது என கூறினார். சைதை துரைசாமி என் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து வருகிறார், ஏற்கனவே அவர் குற்றசாட்டுக்கு பதில் தெரிவித்துவிட்டேன் என்ற அவர் சைதை துரைசாமி சவாலுக்கு தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios