சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானநிலையத்தில், தமிழிசைக்கு எதிராக கோஷம் எழுப்பிய, சோபியா மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக தமிழிசை அளித்த புகாரில் சோபியா கைது செய்யப்பட்டு அவரை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர். இந்த நடவடிக்கைக்கு ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சோபியாவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை "சோபியா செய்தது சரி என்று பலரும் விமர்சனம் செய்கின்றனர்..ஆனால் இன்று எனக்கு நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் என்பதை  நினைவு வைத்துக்கொள்ள வேண்டும்....இன்று முழக்கமிடுபவர்கள் நாளை தாக்கவும் செய்வார்கள்....

ஒரு விமானத்தில் திடீரென இவ்வாறு நடந்துக்கொள்வது...இது பாதுகாப்பு சமந்தப்பட்ட பிரச்சனை என்பதை தலைவர்கள் உணர வேண்டும். விமானத்தில் சோபியா நடந்துக்கொண்ட விதம்,  எனக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது...என்னை போன்று வேறு யாராக இருந்தாலும் இதை தான் செய்து இருப்பார்கள்.
அதுமட்டுமில்லாமல்,  அவர் சாதாரண பயணி போன்று நடந்துக் கொள்ளவில்லை...அவர் ஏதோ ஒரு தூண்டுதலின் பேரில் கோஷம் எழுப்பியது போன்று என்னால் உணர முடிந்தது.