கேளிக்கை வரியை தமிழக அரசு நீக்கவில்லை என்றால் பிரதமர் மோடியை சந்தித்தாவது கோரிக்கை நிறைவேற்றுவோம் என்று டி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு சங்க  அலுவலகத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.ராஜேந்திரன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது: 

கொரோனா வைரஸ் தொற்று காலமாக இருப்பதால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்திக்காமல் தொலைபேசி மூலமாக  வாக்கு சேகரித்து வருவதாகவும், தயாரிப்பாளர் சங்கத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்டுக் கொண்டு வருவோம் எனவும், ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் வினியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்கள் திரையரங்க உரிமையாளர்கள் என மூன்று பேருக்கும் வருமானம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

சிறு பட  தயாரிப்பாளர்களுக்காக தான் போராடுவதாகவும், விபிஎஃப் கட்டணத்தை குறைக்க மிக அழுத்தமாக குரல் கொடுத்த காரணத்தால் தற்காலிகமாக கட்டணத்தை நீக்கி உள்ளதாக தெரிவித்தார். வெளிநாட்டில் VPF கட்டணம் நீக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழகத்தில் கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் முடிந்த பிறகு VPF கட்டணம் நிரந்தரமாக பறிக்கப்படுவது குறித்து எப்படிப் பேச வேண்டும் என்பது குறித்து பேச வேண்டிய விதத்தில் பேசுவோம் என தெரிவித்தார். 

கேளிக்கை வரியை குறைக்க  பிரதமர் மோடியை சந்தித்தாவது அதை நீக்குவோம் என்றார். திரையரங்கம் திறப்பதற்கு பல வழிமுறைகளை தெரிவித்த அரசு கேளிக்கை வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். பாமர மக்களும் திரையரங்கம் வந்து புதிய படம் பார்ப்பதற்கு முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு என டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றார். VPF மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் சில திரையரங்க உரிமையாளர்களுக்கு கட்டணத்தில் பங்கு கொடுக்கிறது சில திரையரங்க உரிமையாளர்கள் கட்டணத்தில் பங்கு கொடுப்ப தில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.