அரசியல் என்று வரும் போது தன் ராஜாங்கம் தகர்ந்திடாமல் நிலைத்திட எதையும் செய்ய தயங்க கூடாது என்பது அரசியல் ராஜ தந்திரி சாணக்கியரின் தத்துவம். ஆனால் இது போன்ற சுயநலங்களுக்கெல்லாம் அப்பர்பட்டவர் சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகார் வாஜ்பாஜ். பா.ஜ.கவை சேர்ந்த மூத்த அரசியல் தலைவரான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமா தனது 93வது வயதில் நேற்று மாலை காலமானார்.

சமீபத்தில் நிகழ்ந்த கலைஞரின் மறைவால் ஏற்கனவே சோகத்தில் இருந்த மக்களுக்கு வாஜ்பாயின் இழப்பு மேலும் துக்கத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. பாஜக தலைவரான வாஜ்பாய் தமிழ்மக்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு அரசியல் தலைவர் என்றே கூறலாம். அவர் செயலில் இருந்த காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பல முக்கிய நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். தமிழர்களுக்காக பலமுறை ஆதரவு குரல் எழுப்பி இருக்கிறார்.

தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தலைவர்களில் இவரும் ஒருவர் என்பதே தமிழ் மக்கள் மனதில் அவர் இடம் பெற முக்கிய காரணம். இன்றளவும் நம் தமிழகத்தின் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதே போன்ற துயரச்சம்பவங்கள்  வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும் நிகழ்ந்தது.

அப்போது வாஜ்பாய் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். மேலும் அவர் அப்போது இலங்கை கடற்படையிடம் தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் இலங்கை என்று ஒரு நாடே இருக்காது என எச்சரிக்கை செய்திருந்தார். அவரின் ஆட்சிக்கு பிறகு பல துயரங்கள் இன்னும் தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அன்று தமிழர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்த வாஜ்பாய்க்கு இன்றும் நம் மக்கள் மனதில் நீங்கா இடம் இருக்கிறது என்பதே உண்மை.