கஜா புயல் வந்து அடித்து நொறுக்கியதிலிருந்து தமிழக அரசு சார்பில்  நிவாரணப்பணியில் அங்கேயே முகாமிட்டிருக்கும் விஜயபாஸ்கர், ஜெயலலிதா நினைவு தினத்திற்கு கூட அமைதிப்பேரணிக்கு வராமல் அங்கேயே இருந்தார். 

நிவாரணப்பணி தொடங்கியதிலிருந்து தீயாக வேலை செய்யும் விஜயபாஸ்கர். மின் ஊழியர் ஒருவர் மின்சார தாக்கிய   போது மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு  அவரின் கூடவே இருந்து, தேவையான உதவிகளை செய்தது  மட்டுமல்லாமல், மின்சாரம் தாக்கிய நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினார்.

அமைச்சரின் இந்த பொறுப்பான செயலுக்கு  அங்கிருக்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர். அதுமட்டுமல்ல அந்த பகுதியில் மக்களோடு மக்களாக உணவருந்துவது தோசை சுட்டு கொடுப்பது என அமைச்சர் என்ற பந்தாவே இல்லாமல் சாதாரணமாகவே அசத்துகிறார்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 95% மீட்பு பணிகள் நிறைவடைந்ததாக சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் சென்றடைந்து விட்டது என்பதை உறுதிசெய்த பின்பு தான் சென்னைக்கு புறப்படுவேன் என சபதம் எடுத்துள்ளார்.