இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அனுப்பிய நோட்டீஸ் இன்று காலை எனக்கு கிடைத்துள்ளது. நான் பேசிய அனைத்து  விவரங்களுக்கும் ஆதாரம் உள்ளது. எனவே நீதிமன்றத்தை சந்திக்க தயாராக உள்ளேன்.  அதிமுக அமைச்சர்களை நான் மிரட்டி பணம் வாங்கி உள்ளேன் என குற்றம்சாட்டி உள்ளனர். 

அடுத்த ஆறு மணி நேரம்தான் பாஜக அலுவலகத்தில் தான் இருப்பேன் முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறாக பேசிய சேலம் எடப்பாடி சேர்ந்த பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இவ்வாறு சவால் விடுத்துள்ளார். திமுக ஆட்சி அமைத்தது முதல் பாஜகவுக்கும் அதிமுகவுக்குமான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிமுக எதிர்க்கட்சி என்றாலும் உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக வினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்காக ஆளும் திமுகவை கடுமையாகவும் அக்காட்சியில் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்து வருகிறார். குறிப்பாக திமுக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் முதலமைச்சரின் துபாய் பயணத்தை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சரின் துபாய் பயணம் தமிழ்நாட்டு மக்களின் நிதியை பெருக்குவதற்கு அல்ல குடும்பத்தை பெருக்குவதற்கு குடும்ப நிதியை பெருக்குவதற்கு என விமர்சித்தார். திமுகவினர் துபாய் சென்று இருப்பது ஊழல் செய்த பணத்தை முதலீடு செய்வதற்காகத்தான் என்றும் அவர் பதில் குற்றச்சாட்டு முன்வைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவரின் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தனது இருப்பைக் காட்டிக்கொள்ள இப்படி பேசுகிறார்கள் என்று அவர் விமர்சித்தார். தன்னிடத்தில் பணம் இல்லை என்றும் மக்களின் அன்பு தான் இருக்கிறது என்றும் அவர் கூறினார். ஸ்டாலினின் துபாய் பயணத்தை விமர்சித்த அண்ணாமலை அதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்கப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் எச்சரித்தனர். இந் நிலையில் தற்போது அண்ணாமலைக்கு 100 கோடி அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதே நேரத்தில் முதலமைச்சரின் துபாய் பயணத்தை விமர்சித்த எடப்பாடியை சேர்ந்த பாஜக பிரமுகரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அனுப்பிய நோட்டீஸ் இன்று காலை எனக்கு கிடைத்துள்ளது. நான் பேசிய அனைத்து விவரங்களுக்கும் ஆதாரம் உள்ளது. எனவே நீதிமன்றத்தை சந்திக்க தயாராக உள்ளேன். அதிமுக அமைச்சர்களை நான் மிரட்டி பணம் வாங்கி உள்ளேன் என குற்றம்சாட்டி உள்ளனர். இன்னும் 6 மணி நேரம் பாஜக தலைமை அலுவலகத்தில் தான் இருப்பேன் ஆதாரம் இருந்தால் திராணி இருந்தால் முழு போலீஸ் படையை பயன்படுத்தி என்னைக் கைது செய்யுங்கள். இல்லையென்றால் இனி நீங்கள் கூறுவதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

ஆயிரம் மானநஷ்ட ஈடு வழக்கு போட்டாலும் சந்திக்க இந்த விவசாய அண்ணாமலை தயாராக உள்ளேன். பிஜிஆர் நிறுவனத்தால் அரசுக்கு நட்டம் தான் ஏற்படும் என தெரிந்தும் அந்த நிறுவனத்திற்கு தான் டேன்ஜட்கோ அனுமதி வழங்க வேண்டுமென முதல்வர் கூறியுள்ளார். நான் இன்று மாலை வரை திநகரிலுள்ள கமலாலயத்தில் தான் இருப்பேன். காவல்துறை என்னை வந்து கைது செய்யட்டும் என்றும் ஆர்.எஸ் பாரதி அறிவே இல்லை என்றும் அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார்.