போயஸ்கார்டன் இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மீண்டும் ஒரு மணி நேரத்திற்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’காவி விவகாரத்தை ஊடகங்கள் தான் பெரிதாக்கி விட்டன. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த விவகாரத்தை ஊடங்கள் தான் பெரிதாக்கி விட்டன. நான் எப்போதும் வெளிப்படையாகத்தான் பேசுவேன். பேசி வருகிறேன். மிசாவில் கைது  ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து தெரியாது. எனக்குத் தெரியாததை நான் பேச மாட்டேன்.

 

அயோத்தி தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டு அமைதி காக்க வேண்டும்.  அரசியல் கட்சி தொடங்கும் வரை திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன்.  எம்.ஜி.ஆர் கூட அரசியலுக்கு வந்த பிறகும் முதல்வராகும் வரை திரைப்படங்களில் நடித்தார். தமிழகத்தில் சரியான ஆளுமைக்கான வெற்றிடம் இன்னும் உள்ளது.  குறிப்பிட்ட சிலர் மட்டுமே எனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்’’என அவர் தெரிவித்தார்.