Asianet News TamilAsianet News Tamil

சர்கார் சர்ச்சை..! மன்னிப்பு கேட்க முடியாது..என்ன பண்றிங்களோ பண்ணிக்கோங்க...! நீதிமன்றத்தில் ஏ.ஆர். முருகதாஸ் அதிரடி..!

விஜய் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை  விமர்சனம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, படத்தில் இருந்து பல காட்சிகள் நீக்கப்பட்டன. 

i wil  not ask apologize for criticising the tn govt in sargar film says director a r murugdoss
Author
Chennai, First Published Nov 28, 2018, 4:56 PM IST

விஜய் நடித்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசின் நலத்திட்ட உதவிகளை  விமர்சனம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, படத்தில் இருந்து பல காட்சிகள் நீக்கப்பட்டன. சர்கார் படம் முழுவதும் ஆளும் அதிமுக அரசை விமர்சனம் செய்யும் வகையில் இலவச சைக்கில், இலவச லேப்டாப், மின் விசிறி என அனைத்து பொருட்களையும் தூக்கி எரியும் காட்சி இடம் பெற்றது. i wil  not ask apologize for criticising the tn govt in sargar film says director a r murugdoss

இதனை எதிர்த்து அதிமுக தொண்டர்கள் ஆங்காங்கு போராட்டம் நடத்தினர்.  திரை அரங்கிற்கே சென்று படத்தை திரையிட கூடாது என போர்க்கொடி தூக்கினர். இதனை தொடர்ந்து அந்த படத்தில் இருந்து சில  காட்சிகள் நீக்கப்பட்டன.  பின்னர் தமிழக அரசை தரக்குறைவாக விமர்சனம் செய்ததற்காக இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தமிழக அரசிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. மேலும் இது போன்ற  விமர்சனங்களை எதிர்காலத்தில் அவருடைய படத்தில் இடம் பெற கூடாது என தேவராஜ் என்பவர்  தொடர்ந்த வழக்கில் கோரப்பட்டது.i wil  not ask apologize for criticising the tn govt in sargar film says director a r murugdoss

இது தொடர்பான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, தமிழக அரசிடம் மன்னிப்பு  கேட்க முடியாது என்றும்....விமர்சன காட்சிகளை இடம்பெற செய்வது என்பது என்னுடைய கருத்து சுதந்திரம் என்றும் தெரிவித்து  உள்ளார் முருகதாஸ். மேலும் இனி வரும் படங்களில் விமர்சிக்க மாட்டேன் என்ற உத்திரவாதமும் அளிக்க முடியாது என முருகதாஸ் தெரிவித்து உள்ளார். 

இந்த நிலையில் இயக்குனர் முருகதாஸ் மீது வழக்கு பதியப்பட்டு இருந்ததால், அவர் முன்ஜாமீன் பெற்று இருந்தார். தொடர்ந்து அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு முன்ஜாமீன் நீடிக்கும் என்றும், அதுவரை முருகதாசை கைது செய்ய தடை விதித்து உள்ளது உயர்நீதிமன்றம்.

 i wil  not ask apologize for criticising the tn govt in sargar film says director a r murugdoss

மேலும், இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உள்ளது உயர்நீதிமன்றம். 
இந்த வழக்கில் வரும் தீர்ப்பு முடிவை பொறுத்து, முருகதாசை கைது செய்யும் நடவடிக்கையில் சட்டம் ஒழுங்கு ஈடுபடுமா என்பது தெரிய வரும்.
  

Follow Us:
Download App:
  • android
  • ios