திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்குமாறு ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் என்னிடம் மன்றாடினர் என மு.க.அழகிரி கூறியுள்ளார். 

திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால் கட்சி தலைமை அழைப்பு விடுக்கவில்லை. 

இந்நிலையில், அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் இன்று மதுரையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் மு.க.அழகிரி பேசுகையில்;-  எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக மாற்றியது நான் இப்போதும் நான் உங்களில் ஒருவன். மதுரை நமது கோட்டை, இதை யாராலும் மாற்ற முடியாது. பல நேரங்களில் பல சோதனைகள் வந்தாலும் அதை கடந்தும் வந்திருக்கின்றோம். 

திமுகவில் இருந்து வைகோ விலகியபோது ஒரு தொண்டன் கூட திமுகவை விட்டு வெளியேவில்லை. சதிகாரர்கள், துரோகிகள் வீழச்சிக்கான முதற்படிப்பட்டு இந்த கூட்டம். குறைந்த வார்டு உறுப்பினர்கள் இருந்தாலும் துணை மேயர் தேர்தலில் சின்னசுவாமியை வெற்றி பெற செய்தோம். மதுரை திருமங்கலம் இடைத்தேர்தலில் மிகப்பெரிய பெற்றி பெற்றோம். திருமங்கலம்  தேர்தலில் ஜெயிக்கத் தவறியிருந்தால் திமுக ஆட்சியே அப்போது கையை விட்டு போயிருக்கும். சுமார் 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்குமாறு ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் என்னிடம் மன்றாடினர். திருமங்கலம் இடைத்தேர்தல் வெற்றிக்கு பணம் காரணம் இல்லை. எங்களின் உழைப்புதான் காரணம். குறிப்பாக தேர்தலில் கருணாநிதியின் உழைப்புதான் திருமங்கலம் தேர்தல் வெற்றியின் ஃபார்முலா என கூறியுள்ளார்.