Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதியை முதல்வர் ஆகவிடாமல் தடுத்தது நான் தான்... மார்தட்டி சீறும் சீமான்..!

எனக்கு வாக்களித்தால் வாழ்வீர்கள். இல்லையெனில் சாக வேண்டியதுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

I was the one who prevented Karunanidhi from becoming the chief minister...seeman
Author
Tamil Nadu, First Published Nov 28, 2019, 11:47 AM IST

எனக்கு வாக்களித்தால் வாழ்வீர்கள். இல்லையெனில் சாக வேண்டியதுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

இலங்கையில் ஈழப்போரின்போது உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரபாகரனை பயங்கரவாதி என்றும் நடிகர் ரஜினிகாந்த் தலைவர் என்றும் வறும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது.

I was the one who prevented Karunanidhi from becoming the chief minister...seeman

நாம் தமிழர் கட்சி மீது வழக்கு தொடர்பவர்களே, தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இறந்து விடுங்கள் எனக்கூறிய சீமான், இல்லை எனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். முதல்வராக இருக்கம்போது கருணாநிதி இறந்துவிட கூடாது என்று நினைத்தேன், அதை நடத்தியும் விட்டேன். கடைசி வரை அவரை முதல்வராக விடவில்லை என்றார். முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியை படுகொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று மீண்டும் கூறிய சீமான், வன்முறைக்கு எதிரான வன்முறையும் அகிம்சைதான் என பேசினார். 

I was the one who prevented Karunanidhi from becoming the chief minister...seeman

எல்லாவற்றிற்கும் மேலாக தனக்கு வாக்களித்தால் நீங்கள் வாழ்வீர்கள் என்றும், இல்லையெனில் சாக வேண்டியதுதான் என்றும் சீமான் கூறினார். 
மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக கார் வழங்குவதாக வாக்குறுதி அளிப்பேன். தேர்தலில் வென்றதும் கார் கேட்பவர்களிடம் அம்பேத்காரின் புகைப்படத்தை காட்டுவேன் என்று சீமான் நகைச்சுவையாக பேசினார். பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம், நாட்டை யார் விரைந்து விற்பது என்பதில்தான். ஆளும் கட்சி மக்களை ஏமாற்றி வரும் நிலையில் நாங்கள் மக்களை மாற்ற முயற்சிக்கிறோம் என சீமான் பேச்சில் நெருப்பை கக்கினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios