Asianet News TamilAsianet News Tamil

ஜான்பாண்டியன் கல்யாணத்த நடத்தி வைச்சதே நான் தான்... உணர்ச்சி பொங்கும் ராமதாஸ்...!

தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜான்பாண்டியனின் அரசியல் பயணம் பாட்டாளி மக்கள் கட்சியில் தான் தொடங்கியது என பழைய நினைவுகளை ராமதாஸ் பகிர்ந்துள்ளார்.

I was the one who conducted the Johnpondian wedding...Emotional Ramadoss
Author
Tamil Nadu, First Published Feb 15, 2021, 12:26 PM IST

தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜான்பாண்டியனின் அரசியல் பயணம் பாட்டாளி மக்கள் கட்சியில் தான் தொடங்கியது என பழைய நினைவுகளை ராமதாஸ் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது முகநூல் பக்கத்தில்;- தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜான்பாண்டியனின் அரசியல் பயணம் பாட்டாளி மக்கள் கட்சியில் தான் தொடங்கியது. 1989-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய போது, அவர் அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை சிறப்புகள் குறித்து மக்களிடம் முழங்கினார்.

I was the one who conducted the Johnpondian wedding...Emotional Ramadoss

பாட்டாளி மக்கள் கட்சி 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டு நவம்பர் மாதத்திலேயே, அதாவது கட்சி தொடங்கிய ஐந்தாவது மாதத்தில், நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் தேர்தல் ஆகும். அந்த தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக ஜான்பாண்டியன் நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் 83,933 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

I was the one who conducted the Johnpondian wedding...Emotional Ramadoss

1991-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சந்தித்த அதன் முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜான் பாண்டியன் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் அவர் 29,021 (30.24%) வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதற்கெல்லாம் மேலாக ஜான்பாண்டியன் - பிரிசில்லா பாண்டியன் இணையர் திருமணத்தை நடத்தி வைத்தி வாழ்த்தியதும் நான் தான் என உணர்ச்சி பொங்க ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios