Asianet News TamilAsianet News Tamil

செத்துடலாம்னு நினைக்கிறேன்.. முதல்வர் ஸ்டாலினோடு பேச என்னை அனுமதிக்கமாட்றாங்க.. நொந்து போன நெல்லை கண்ணன்!

அன்று என் கரங்களைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு, ‘இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது’ என்றார். இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார். 

I think I can die .. Do not allow me to talk to Chief minister MK Stalin .. Nellai Kannan who gives a shock!
Author
Chennai, First Published May 31, 2022, 8:10 AM IST

79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது  சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை என்று காங்கிரஸ் பிரமுகரான நெல்லை கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகரான நெல்லை கண்ணன், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கண் கலங்கி பேசினார். தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அவருடைய ஆட்சியையும் புகழ்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். காமராஜரோடு முதல்வர் முதல்வர் ஸ்டாலினை ஒப்பிட்டு நெல்லை கண்ணன் பேசியது பேசுபொருளானது. இந்நிலையில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நெல்லை கண்ணன் ஒரு நிலைத்தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில், “வேறு வழியில்லை  எழுத வேண்டியிருக்கின்றது. மிகச் சிறப்பான முதல்வர்  என உலகம் போற்றுகின்றது. அதனை யாரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது.

I think I can die .. Do not allow me to talk to Chief minister MK Stalin .. Nellai Kannan who gives a shock!

விருது வழங்கும் விழாவில்  என்னை தானே  பிடித்து தன் பக்கத்தில் அமர வைத்து என்னிடம் காட்டிய தாயுள்ளத்தை உயிர் உள்ள வரை மறக்க மாட்டேன். அன்று என் கரங்களைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு, ‘இனி நீங்கள் கண் கலங்கி நான் பார்க்கக் கூடாது’ என்றார். இனி நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன். என்னை நீங்கள் எப்போதும் அழைக்கலாம் என்றார். எந்து ஒரு கடிதத்திற்கும் கூட விடை இல்லை. நேரில் பேச அனுமதிக்கவில்லை.  79 வயதுக் கிழவன் நொந்து போயுள்ளேன். யாராவது  சொல்லுங்களேன் ஒரு நல்ல தலைவரோடு ஏன் என்னை பேச அனுமதிக்கவில்லை. 

I think I can die .. Do not allow me to talk to Chief minister MK Stalin .. Nellai Kannan who gives a shock!

அவரது உதவியாளர் வெண்ணந்தூர் தினேஷ் அனுமதிக்க வே மறுக்கிறார். இதனாலேயே இறந்து போகலாம் எனக் கருதுகின்றேன். மரணம் தானே உறுதி” என்று நெல்லை கண்ணன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். நெல்லை கண்ணன் 1996-ஆம் ஆண்டில் சேப்பாக்கம் தொகுதியில் அன்றைய திமுக தலைவர் மு. கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டவர். அன்று அதிமுக - காங்கிரஸ் கூட்டணியில் நெல்லை கண்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios