அலட்சியம் காட்டிய துரைமுருகன்..! எடப்பாடி கையில் திமுக தேர்தல் வியூகம்..!

அண்மையில் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

I-T raids on Durai Murugan house

அண்மையில் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

திடீரென கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்குள் வருமான வரித்துறையினர் நுழைந்தனர். சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையை தொடர்ந்து 10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதேபோல் இரண்டு சூட்கேஸ்களில் நிறைய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அள்ளிச்சென்ற தாகவும் கூறப்பட்டது.

 I-T raids on Durai Murugan house

இந்த தகவலை துரைமுருகன் உறுதிப்படுத்தாமல் மறுத்து வந்தார். ஆனால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுபடி துரைமுருகன் வீட்டிலிருந்து பத்து லட்சம் ரூபாய் பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப் பட்டது உண்மைதான் என்று தெரிவித்துவிட்டார். 10 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது திமுகவினரை பொறுத்தவரை ஒரு மிகப் பெரிய விஷயமில்லை. ஆனால் துரைமுருகன் வீட்டில் இருந்த சிக்கிய ஆவணங்கள் தான் அவர்களுக்கு பெரும் மனக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.I-T raids on Durai Murugan house

ஏனென்றால் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் தான் நாடாளுமன்ற மற்றும் 18 தொகுதி இடைத் தேர்தலுக்கான தேர்தல் வியூகத்தை நடைமுறைப்படுத்தும் முக்கியமான பொறுப்பில் இருந்தார். அதாவது தொகுதி வாரியாக கட்சியிலிருந்து அளிக்க வேண்டிய நிதி மற்றும் செலவு விவரங்களை துரைமுருகன் தான் கவனித்து வந்தார். எந்தெந்த தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் யாருக்கு இதுவரை எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது வேட்பாளர்களுக்கு இனி கட்சியில் இருந்து எவ்வளவு கொடுக்க வேண்டும் என அனைத்து விபரமும் இவர்களிடம் தான் இருந்தது.

 I-T raids on Durai Murugan house

அதுமட்டுமல்லாமல் வாக்குப் பதிவுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக கட்சித் தலைமை ஒவ்வொரு தொகுதியிலும் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலைக்கான ப்ளூ பிரின்ட்டும் துரைமுருகன் வசம்தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இப்படி தேர்தல் வியூகத்தை அமல்படுத்த தேவையான நிதி ஆதாரங்கள் தொடர்பான அனைத்தையும் துரைமுருகன் நிர்வகித்து வந்துள்ளார். I-T raids on Durai Murugan house

இந்த நிலையில்தான் வருமான வரித்துறையினர் அவரது வீட்டிற்குள் புகுந்து அனைத்தையும் அள்ளிச் சென்றுள்ளனர். அதாவது திமுகவின் தேர்தல் வியூகத்தை முழுவதுமாக அவர்கள் அள்ளிச் சென்று விட்டனர் என்பதுதான் தற்போதைய நிதர்சனம். அதுமட்டுமல்லாமல் அங்கு இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் மிக முக்கியமான தகவல்கள் உடனடியாக டெல்லிக்கும் பிறகு எடப்பாடிக்கும் பகிரப்பட்ட தாகச் சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் திமுகவின் தேர்தல் வியூகம் தற்போது எடப்பாடி கையில் பக்காவாக இருப்பதாகவும் அதன் அடிப்படையில் அதிமுக வியூகத்தை வகுத்து திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் பேசப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios