Asianet News TamilAsianet News Tamil

200 ஆண்டுகளில் இல்லாத மழையாம்.. உங்களோடு நானும் களத்தில் நிற்கிறேன்.. ஓய்வில்லாமல் உழைக்கும் முதல்வர்.!

கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது.

I stand in the field with you .. CM Stalin who works tirelessly
Author
Chennai, First Published Nov 28, 2021, 8:21 AM IST

மிக அதிக மழை  பெய்யும் இக்காலத்தில் நேரம், காலம் பார்க்காது களத்தில் பணியாற்றி வரும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுடன் நானும் களத்தில் நிற்கிறேன், நிற்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

I stand in the field with you .. CM Stalin who works tirelessly

இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் சென்னையில் மீண்டும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனையடுத்து, திரு.வி.க.நகர் மண்டலம், டிமெலஸ் சாலை, தியாகராய நகர், விஜயராகவாச்சாரி சாலைப் பகுதிகளில் கால்வாயில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளநீர் வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ஜி.என். சாலை, பசுல்லா சாலை மற்றும் திருமலை சாலை ஆகிய பகுதிகளில் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை கொட்டும் மழையில் பார்வையிட்டு ஆய்வு செய்து, தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றிட துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

I stand in the field with you .. CM Stalin who works tirelessly

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!

I stand in the field with you .. CM Stalin who works tirelessly

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன் என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios