Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு உளப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன்.. நெகிழ்ந்துபோன சீமான்..!

தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்ற செய்தியறிந்தேன்.

I sincerely thank Chief Minister Stalin for his announcement .. Flexible Seaman ..!
Author
Chennai, First Published Nov 19, 2021, 10:57 PM IST

பொருளாதார நலிவு நிலையிலிருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாகப் பொருட்களை வழங்குவதாகக் கூறியிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.I sincerely thank Chief Minister Stalin for his announcement .. Flexible Seaman ..!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். சர்க்கரை பொங்கல் செய்வதற்கு வசதியாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் உள்ளிட்ட வழங்கப்பட உள்ளன. அதோடு மளிகைப் பொருட்களும் வழங்கப்பட உள்ளன. மொத்தம் 20 பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன. பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறவில்லை என்று கரும்பு விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதனையடுத்து, கரும்பும் பட்டியலில் சேர்க்க முதல்வர் உத்தரவிட்டார்.

அரிசி அட்டைதாரர்கள் மட்டும் அல்லாமல் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்போருக்கும் இந்தப் பொங்கல் பரிசை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ள ஈழச்சொந்தங்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்குவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கின்ற செய்தியறிந்தேன். நிலத்தை இழந்து, உரிமை இழந்து, உடைமை இழந்து, உறவுகளைச் சாகக் கொடுத்து, ஆதரவற்ற சூழலில் தாய்த் தமிழகத்தை நம்பி வந்துள்ள ஈழச் சொந்தங்களுக்குக் கரம்கொடுத்து பக்கத் துணையாக நிற்க வேண்டியது தமிழக அரசின் தார்மீகக் கடமையாகும்.I sincerely thank Chief Minister Stalin for his announcement .. Flexible Seaman ..!

பெரும் பொருளாதார நலிவு நிலையிலிருக்கும் ஈழச்சொந்தங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில், பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்கு ஏதுவாகப் பொருட்களை வழங்குவதாகக் கூறியிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதற்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!” என்று அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios