Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் சொல்கிறேன்.. தற்கொலை என்பது தீர்வல்ல.. நீட் ஒரு தேர்வே அல்ல.. வேதனையில் வெந்து தணியும் ஸ்டாலின்..!

நீட் தேர்வு அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை  செய்தது அதிர்ச்சி அளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

I repeat .. Suicide is not the solution... mk stalin Pain
Author
Tamil Nadu, First Published Sep 12, 2020, 11:55 AM IST

நீட் தேர்வு அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை  செய்தது அதிர்ச்சி அளிக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம். இவரது 19 வயது மகளான ஜோதிஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் இந்தாண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்களும், நீட் தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

I repeat .. Suicide is not the solution... mk stalin Pain

இந்நிலையில், இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில்;- நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. "எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு" என்று அவர் பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுகிறது.

I repeat .. Suicide is not the solution... mk stalin Pain

ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது. தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்கிறேன்! நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்! என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios