அதாவது நவராத்திரி பண்டிகையையொட்டி டெல்லி மாநகராட்சி மேயர் முகேஷ் சூரியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நவராத்திரி என்பது இந்துக்கள் கொண்டாடும் ஒரு புனித பண்டிகை, இந்த புனிதமான நாட்களில் மாநகராட்சியில் உள்ள இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும், அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வரும் 11-ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகள் திறந்து இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

நான் விரும்பும்போது இறைச்சி சாப்பிட அரசியலமைப்புச்சட்டம் எனக்கு உரிமை வழங்கி இருக்கிறது என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா கருத்து தெரிவித்துள்ளார். நவராத்திரியை ஒட்டி டெல்லியில் உள்ள இறைச்சி கடைகளுக்குதடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மஹூவா இவ்வாறு விமர்சித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி என்றாலே வேகமும் துடிப்பும் மிக்க தலைவர்களை நிறைந்த கட்சி என்றே சொல்லத் தோன்றும். அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தன்னைப்போலவே தனக்கு அடுத்து உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களையும் போராட்ட குணம் உள்ளவர்களாகவும், மக்களுக்காக துணிந்து குரல் கொடுக்கும் தைரியம் உள்ளவர்களாகவும் வார்ப்பித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

பொதுவாக பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் செயல்பாடு பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் என்பதையும் தாண்டி அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் கருத்துச் செறிவு உடையதாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக அக்கட்சியின் பெண் எம்பி மஹூவா மொய்த்ரா அவையில் உரையாற்றினால் அனல் பறக்கும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவரின் உரைவீச்சு இருக்கும், இந்நிலையில்தான் அவர் டெல்லி மாநகராட்சியின் அறிவிப்பு ஒன்றை கடுமையாக விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அதை பலரும் வரவேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதாவது தான் விரும்பிய நேரத்தில் இறைச்சி உண்ண இந்திய அரசியலமைப்புச்சட்டம் தனக்கு உரிமை வழங்கி இருக்கிறது என்பதுதான் அந்ந பதிவு.

அதாவது நவராத்திரி பண்டிகையையொட்டி டெல்லி மாநகராட்சி மேயர் முகேஷ் சூரியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நவராத்திரி என்பது இந்துக்கள் கொண்டாடும் ஒரு புனித பண்டிகை, இந்த புனிதமான நாட்களில் மாநகராட்சியில் உள்ள இறைச்சிக் கடைகள் மூடப்பட வேண்டும், அதாவது ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வரும் 11-ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகள் திறந்து இருந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மாநகராட்சி மேயரின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இது டெல்லியில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில்தான் திருணாமுல் காங்கிரசின் பெண் எம்.பியும், டெல்லியைச் சேர்ந்தவருமான மஹூவா மொய்த்ரா டெல்லி மாநகர மேயரின் அறிவிப்பை கடுமையாக எச்சரித்து 

Scroll to load tweet…

பதிவிட்டுள்ள ட்விட்டரில், நான் தெற்கு டெல்லியில் வசித்து வருகிறேன், நான் விரும்பிய நேரத்தில் இறைச்சி சாப்பிட எனக்கு அரசியலமைப்புச்சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது, விரும்பிய நேரத்தில் இறைச்சி உண்ணவும், வியாபாரிகள் இறைச்சி வியாபாரம் செய்யவும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஃபுல் ஸ்டாப் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.