Asianet News TamilAsianet News Tamil

எனக்கு ஓட்டுப்போடலைனா சூனியம் வைச்சிருக்கேன்... கை, கால் விளங்காமல் போகும்... மிரட்டும் தி.மு.க வேட்பாளர்..!

கடவுள் மறுப்புக் கொள்கை, பகுத்தறிவு, சாதி, மதம் கடந்த நிலை என தன்னை முழுமையான நாத்திகக் கட்சியாக காட்டிக் கொள்ளும் திமுக கட்சியை சேர்ந்த ஒருவர் வாக்குச் சேகரித்துள்ள முறை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  
 

I have put sorcery on the ballot ... I will not understand the hand and foot ... Intimidating DMK candidate
Author
Tamil Nadu, First Published Mar 31, 2021, 6:00 PM IST

கடவுள் மறுப்புக் கொள்கை, பகுத்தறிவு, சாதி, மதம் கடந்த நிலை என தன்னை முழுமையான நாத்திகக் கட்சியாக காட்டிக் கொள்ளும் திமுக கட்சியை சேர்ந்த ஒருவர் வாக்குச் சேகரித்துள்ள முறை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.  

மக்களைக் கவர்வதற்காக, வேட்பாளர்கள் வித்தியாச, வித்தியாசமாக வாக்கு சேகரித்துவருகின்றனர். பொதுமக்களின் துணிகளைத் துவைத்தும், தோசை, காபி போட்டுக்கொடுத்தும், துணியை அயர்ன் பண்ணிக்கொடுத்தும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். இதற்கிடையில், தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர்கள் மிகவும் உருகிப் பேசியும் வாக்கு கேட்கின்றனர்.I have put sorcery on the ballot ... I will not understand the hand and foot ... Intimidating DMK candidate

 இந்நிலையில், கடலூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் ஐயப்பன் மக்களை மிரட்டும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  தி.மு.கவுக்கு ஓட்டுபோடாவிட்டால் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று தி.மு.க வேட்பாளர் ஐயப்பன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.I have put sorcery on the ballot ... I will not understand the hand and foot ... Intimidating DMK candidate

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஐயப்பன், ‘கடலூர் மக்களுக்கு கேரள மந்திரவாதிகள் மூலமாக சூனியம் வைத்துள்ளேன். திமுகவுக்கு ஓட்டுபோடாதவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். விருப்பப்பட்டு யார் பணம் கொடுத்தாலும் வாங்கி கொள்ளுங்கள். ஆனால், உதயசூரியனுக்கு வாக்களித்துவிட்டு அதனை செலவு செய்யுங்கள்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஐயப்பன் என்று பெயர் வைத்துள்ளதாலோ என்னவோ திமுக கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஓட்டுப்போடவில்லை என்றால் சூன்யம் வைத்து விடுவதாக மிரட்டியுள்ளார்.  கடலூர் முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் திமுகவில் இணைந்தார். 2006-11 திமுக ஆட்சியின்போது கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஐயப்பன். 2011ஆம் ஆண்டு கடலூர் மாவட்ட உட்கட்சி அரசியலால் திமுகவிலிருந்து விலகி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பெரும் ஆதரவாளர் கூட்டத்துடன் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அதிமுகவின் மாவட்ட அவைத்தலைவரானார். I have put sorcery on the ballot ... I will not understand the hand and foot ... Intimidating DMK candidate

அதிமுக பிளவின்போது ஓபிஎஸ் அணியில் இருந்தார் இவர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்புக்குப் பிறகு ஓபிஎஸ் தனக்கு உறுதுணையாக வந்தவர்களை புறக்கணிப்பதாக செய்திகள் வந்தன. பலரும் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பினர். இதன் காரணமாக ஐயப்பன், திமுகவில் இணைந்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios