தி.மு.க. இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதியின் கட்டளைப்படிதான் அங்குள்ள சீனியர் நிர்வாகிகள் வரை செயல்பட்டு வருகிறார்கள். 

குறிப்பாக, தனது ரசிகர்மன்ற தலைவரும், திருவெறும்பூர் எம்.எல்.ஏ.,வுமான மகேஷ் பொய்யாமொழிக்கு, மிக அதிக உரிமை கொடுத்திருக்கிறார் உதயநிதி. அந்த வகையில், திருச்சி பகுதியில் ஏற்கெனவே கோலோச்சி வந்த கே.என். நேருவை, கிட்டதட்ட ஓரம் கட்டி வருகிறார் மகேஷ். நேருவின் ஆதரவாளர்கள் பலர், ‘இனி மகேஷூக்குத்தான் எதிர்காலம்’என கணித்து அவர் பக்கம் சாய்ந்துவிட்டனர்.

’இதனால் மனம் நொந்த நேரு, எப்படி தனது இருப்பை வெளிப்படுத்துவது என்று படாதபாடுபட்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடிகர் விமல் வீட்டுக்குச் சென்று கே.என்.நேரு சந்தித்தார். அவரை கட்சிக்குள் கொண்டுவந்தால், திருச்சி பகுதியில் தனது செல்வாக்கை மீண்டும் அதிகரிக்கலாம் என நினைக்கிறாராம் நேரு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள, பன்னாம்கொம்பு கிராமத்தைச் சேர்ந்தவர்தான் இந்த நடிகர் விமல். இவர் நடிகர் என்பதாலும், ஜாதி ரீதியாகவும் செல்வாக்கு உடையவர் என்பதலும் தி.மு.க., சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட வைக்க கே.என்.நேரு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

''இது தொடர்பாக தி.மு.க., இளைஞரணி செயலரான உதயநிதி மற்றும் அவரின் நண்பர், மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து விமலை பேச வைத்திருக்கிறார் கே.என்.நேரு. ’’நான் அரசியலுக்கு வந்ததே பிடிக்கவில்லை. தி.மு.க.விற்காக காலங்காலமா போஸ்டர் ஒட்டுகிற அடிமட்ட தொண்டர்களுக்கே இங்கே வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. இதில் உனக்கு எப்படி வாய்ப்புக் கொடுப்பது? என விமலை பார்த்து விரட்டி விட்டாராம் உதயநிதி.

 

அடுத்து முதன்மை செயலாளரான கே.என்.நேருவை அழைத்து,’’உங்கள் மனதில் என்ன நினைத்துள்ளீர்கள்..? செல்வாக்கே இல்லாத ஒரு நடிகரை கூட்டி வந்து எனக்கும், என் நண்பன் மகேஷுக்கும் எதிராக அரசியல் செய்யத் திட்டமிட்டு உள்ளீர்களா? என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம் உதயநிதி.