ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது ஏன் அரசியலுக்கு வரலைன்னு சிலர் கேட்கிறார்கள்? அவரைப் பார்த்தா பயமா எனவும் கேட்கிறார்கள்…. பயமா? எனக்கா?  நான் ஜெயலலிதாவை எதிர்த்து 1996 லிலேயே குரல் கொடுத்தவன் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் , முன்னாள் முதலமைச்சர்  எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி யாருமே கேள்விகேட்க முடியாது. அவரை போல எந்தஒரு தலைவரும் ஒருகட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைக்கமுடியாது என தெரிவித்தார்.

அந்த பக்கம் தலைவர் கருணாநிதி. என் அருமை நண்பர், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லையென்றாலும் தன் கட்சியை கட்டி காப்பாற்றினார். ஜெயலலிதாவின் மறைவு, கருணாநிதியின் உடல்நலக் குறைவு போன்ற காரணங்களால் தமிழக அரசியலில் தற்போது வெற்றிடம் உருவாகியுள்ளது என தெரிவித்த ரஜினி அந்த வெற்றிடத்தை நிரப்பவே தான் அரசியலில் இறங்கியுள்ளதாக கூறினார்.

ஜெயலலிதா  உயிருடன் இருக்கும்போது அரசியலுக்கு ஏன் வரவில்லை பயமா? என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். 1996-ம் ஆண்டு நிலைமை எல்லோருக்கும் தெரியும். அப்போதே ஜெயலலிதாவுக்கு  எதிராக குரல் கொடுத்த எனக்கு, ஏன் வரப்போகிறது பயம்?  என கேள்வி எழுப்பினார

தமிழகத்துக்கு இப்போது ஒரு தலைமை தேவை. ஒரு தலைவன் தேவை. அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன் என்றும் ரஜினிநாந்த் தெரிவித்தார்