பிக் பாஸ்' முதல் சீசனில் பங்கேற்றதன் மூலம் உலகெங்கும் உள்ள அனைத்து தமிழ் ரசிகர்களை தனக்குத் தானே இழுத்துக்கொண்டார்.மூன்று சீசன்களில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களை விடவும் அதிகம் பிரபலமானவர் ஓவியா. அதிலும் ஓவியா ஆர்மியை அடித்துகொள்ள இன்னும் சமூக ஊடகங்களில் ஈடு இல்லை.

ஓவியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் மீண்டும் தொடர்பு கொண்டார். அதில் அவரது வழக்கமான அணுகுமுறையில் அனைத்து தந்திரமான எடக்குமுடக்கான கேள்விகளுக்கும் நச்சென்று, வெளிப்படையான பதில்களைக் கொடுத்தார்.

 

ட்விட்டரில்  ஒரு நபர் இப்படி கேள்வி கேட்டார். “ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு பதிலாக, சுயஇன்பம் நல்லது! நான் சொல்வது சரியானதா? மேம்” என்று அதற்கு சற்றும் தாமதிக்காமல் உடனடியாக “உண்மை!” என பதிலளித்திருக்கிறார்.மற்றொரு ரசிகர்.. 'உங்கள் வருங்கால கணவரைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருக்கிறதா? என்று கேட்டதற்கு “எனக்கு கணவர் தேவையில்லை” என்று பதிலளித்துள்ளார்.மேலும் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு "அரசியலில் நுழைவது குறித்து உங்களுக்கு ஏதேனும் யோசனை உள்ளதா? என்று கேட்க அது தேவைப்பட்டால்.. என்று சுருக்கமாக பதிலளித்துள்ளார் ஓவியா.பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு '90 எம்.எல்' என்ற படத்தில் நடித்தார். அப்படம் எதிர்பர்த்த பலன் கொடுக்கவில்லை. ஓவியா தனது ரசிகர்களுக்கு ஒரு சில வலைத் தொடர்களைச் செய்து வருகிறார்.