Asianet News TamilAsianet News Tamil

அஜித்தை நாங்க கூப்பிட்டோமா..? தாறுமாறாய் ஜகா வாங்கிய தடாலடி தமிழிசை..!

தமிழிசையின் செயல்பாடுகளால் அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக் ஆகியிருக்கிறார் அஜித்குமார்.  அவர் அறிக்கை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில் அஜித்தை அரசியலுக்கே அழைக்கவில்லை என யுடர்ன் அடித்துள்ளார் தமிழிசை. 
 

i didnt invite actor ajith to join bjp party tamilisai reply to actor ajith
Author
Tamil Nadu, First Published Jan 22, 2019, 11:01 AM IST

தமிழிசையின் செயல்பாடுகளால் அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக் ஆகியிருக்கிறார் அஜித்குமார்.  அவர் அறிக்கை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ள நிலையில் அஜித்தை அரசியலுக்கே அழைக்கவில்லை என யுடர்ன் அடித்துள்ளார் தமிழிசை. i didnt invite actor ajith to join bjp party tamilisai reply to actor ajith

அண்மையில் நடிகர் அஜித்தை குறித்து தமிழிசை பேசிய போது, ‘திரைத்துறையில் மிகவும் நேர்மையானவர் அஜித். அவர் பலருக்கு நல்லதை செய்துள்ளார். அவரைப் போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். இனி மோடியின் திட்டங்களை அவர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இறுதியில் அஜித் ரசிகர்கள் மோடியின் தொண்டர்களாக மாறி தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்று கூறினார். i didnt invite actor ajith to join bjp party tamilisai reply to actor ajith

தமிழிசையின் இந்தப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ’எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை’ என அஜித் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

 i didnt invite actor ajith to join bjp party tamilisai reply to actor ajith

இந்நிலையில் அஜித்தின் அறிக்கை குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, ’’அஜித்குமாரை பாஜகவில் சேருமாறு அழைக்கவே இல்லை. அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று சில நடிகர்களைப் போல சொல்லாமல், அஜித் தெளிவான முடிவை அறிவித்துள்ளார். அரசியலுக்கு நான் வரமாட்டேன் என்று அஜித் கூறியிருப்து வரவேற்கத்தக்கது. நான் அவரை பாஜகவில் சேருமாறு அழைக்கவில்லை. நான் மருத்துவராக இருந்த போது ஒரு குழந்தைக்கு அஜித் உதவினார். அதையே தான் நான் பாராட்டினேன்’ என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios