Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடியை ஓபிஎஸ் ஏற்றாலும் நான் ஏற்கமாட்டேன், நான் தன்மானம் உள்ளவன் - புகழேந்தி தடாலடி

எடப்பாடி பழனிச்சாமி பேசிய  பேச்சுக்களை ஓ பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டாலும் நான் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை தனக்கு தன்மானம் உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

i can not accept edappadi palaniswami speech says pugazhendhi
Author
First Published Feb 4, 2023, 5:18 PM IST

கர்நாடகா மாநில ஓ.பன்னீர்செல்வம் அணி செயலாளர் புகழேந்தி இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தேவைப்படும்போது பாரதிய ஜனதா கட்சியின் உதவியை எடப்பாடி அணியினர் பெற்றுக் கொண்டு இப்போது தேர்தலின் போது அவர்கள் ஆலோசனை எங்களுக்கு தேவை இல்லை என பொன்னையன் உள்ளிட்டோர் சொல்வது சரியல்ல. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொருத்தவரை உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் அணி உடன் கலந்து வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. எனவே தமிழ் மகன் உசேன் இந்த விஷயத்தில் நியாயமாக செயல்பட்டு வேட்பாளரை அறிவிக்க வேண்டும்.

உச்சநீதிமன்ற ஆணையை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். பாரதிய ஜனதாவை பொருத்தவரை எடப்பாடி முதலமைச்சர் ஆவதற்கு அவர்களது உதவி வேண்டும். இப்போது அவர்களுடைய ஆலோசனை எங்களுக்கு தேவை இல்லை என பொன்னையன் போன்றோர் சொல்வது சரியானது அல்ல. அப்படி என்றால் ஏன் உச்ச நீதிமன்ற வரை செல்ல வேண்டும். எனவே இந்த தேர்தலில் அவர்களது யோசனையையும் கேட்கத்தான் வேண்டும். 

கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க உதவியது பாமக - அன்புமணி பேச்சு

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் தவழ்ந்து வந்து ஆட்சியை பிடித்தார். தனது முதுகில் குத்தி விட்டதாக சசிகலா கூறினார். எடப்பாடி பழனிச்சாமி பேசிய பேச்சுக்களையும் ஓ பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டாலும் நான் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை தனக்கு தன்மானம் உள்ளது என்று அவர் கூறினார். மேலும் பேனாவை வைத்து தான் கருணாநிதியின் புகழ் உலகிற்கு தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை  என்றும் அவர் கூறினார்.

செந்தில் பாலாஜி எனக்கு இன்னொரு மகன்: அவர் வந்தவிட்டாலே வெற்றி உறுதி; ஈவிகேஎஸ் உருக்கம்

Follow Us:
Download App:
  • android
  • ios