Asianet News TamilAsianet News Tamil

அதிமுகவில் அந்தப்பதவிக்கு தகுதியானவன் நான்தான்..! மார்தட்டும் சீனியர்..!

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதும் முதல் மாவட்ட அமைப்பாளராக அவர் அறிவித்ததும் என்னைத்தான். இப்படி அன்று முதல் இன்று வரை கட்சியில் தொடர்பவன் நான்.

I am the one who deserves that post in AIADMK says tamil magan hussain
Author
Tamil Nadu, First Published Oct 11, 2021, 12:15 PM IST

அவைத்தலைவரை பொறுத்தவரை கட்சியின் மிக மூத்த நிர்வாகிகளை நியமிப்பதே வழக்கம். அதன்படி, அதிமுக அவைத்தலைவராக 
பொன்னையன், தம்பிதுரை இருவரில் ஒருவரை கொண்டு வர இபிஎஸ் திட்டமிட்டு இருந்ததாகவும், தமிழ்மகன்உசேன், அன்வர் ராஜா இருவரில் ஒருவரை கொண்டு வர ஒபிஎஸ் திட்டமிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. I am the one who deserves that post in AIADMK says tamil magan hussain

தற்போது தமிழ்மகன் உசேன், பொன்னையன் ஆகியோர் மிக மூத்த நிர்வாகிகளாக உள்ளனர். இவர்களில் பொன்னையன் அவைத்தலைவர் பதவியை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே தமிழ்மகன் உசேனுக்கு இந்தப்பதவி உறுதியாகி இருக்கிறது. இதுபற்றி அவர் கூறுகையில், ’’நான் அவைத்தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட இருப்பது உண்மைதான். 68 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கிறேன். 1972-ல் எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட நாள் அக்டோபர் 10.I am the one who deserves that post in AIADMK says tamil magan hussain

அப்போது நான் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றினேன். நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு பஸ்சை ஓட்டி வந்தேன். மதுரை மேலூரில் சென்றபோது ரோட்டில் பெரும் கூட்டம் நின்றது.விசாரித்தபோது எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட செய்தி ரேடியோவில் ஒலிபரப்பாகிறது. உடனே பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு இந்த ஆட்சியில் நான் ஓட்டுனராக நீடிக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதி கண்டக்டரிடம் கொடுத்துவிட்டு வாடகை காரில் நாகர்கோவில் விரைந்தேன்.I am the one who deserves that post in AIADMK says tamil magan hussain

அங்கு எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று தீர்மானம் போட்டு எடுத்துக்கொண்டு மறுநாள்  காலையில் சென்னை வந்தேன். ராமாவரம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்றேன். அவருடன் சத்யா ஸ்டுடியோ சென்று ஆலோசனையில் ஈடுபட்டவர்களில் நானும் ஒருவன். கட்சி தொடங்குவதற்காக கையெழுத்து போட்ட 11 பேரில் நானும் ஒருவன்.

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதும் முதல் மாவட்ட அமைப்பாளராக அவர் அறிவித்ததும் என்னைத்தான். இப்படி அன்று முதல் இன்று வரை கட்சியில் தொடர்பவன் நான். எனவே அவைத்தலைவர் பதவியை விரும்புவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்’’என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios