ஓய்வு தேவை என்பதால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது என்று சீமான் கூறியுள்ளார். 

உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப் போவதில்லை என்பதை நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக அறிவித்திருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். ஒருபக்கம் அரசியல் கட்சிகள், ரஜினி அரசியலுக்கு வரவே போவதில்லை என மகிழ்ந்து கொண்டாடுகின்றார். இன்னொரு பக்கமோ ரஜினி ரசிகர்கள் எப்படியாவது தலைவரை அரசியலில் இழுத்துவிட்டாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர். இந்நிலையில், ரஜினி ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என போஸ்டர் ஒட்டியும், ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளிக்கையில்;- ஓய்வு தேவை என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்றும் அவர் வந்தாலும் மாற்றம் ஏற்படாது.  

புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினியால் தமிழகத்தில் மோசமான ஆட்டம் நடப்பதாகவும் அரசியலில் ரஜினியை இறக்கி விடுபவர்களே அவரை இழிவாக பேசுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.