Asianet News TamilAsianet News Tamil

’நான் தனி ஆள் இல்ல...’ நாடாளுமன்றத்தில் நிரூபித்த ஓ.பி.எஸ் மகன்..!

நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் உறுதி மொழி எடுத்துக் கொண்டபோது அவரை கைதட்டு வரவேற்றனர். 
 

I am not a single person ... OPS son proved in parliament
Author
Tamil Nadu, First Published Jun 18, 2019, 2:25 PM IST

நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் உறுதி மொழி எடுத்துக் கொண்டபோது அவரை கைதட்டு வரவேற்றனர். I am not a single person ... OPS son proved in parliament

இன்று மக்களவையில் தமிழ்நாட்டு எம்பிக்கள் பதவியேற்றனர். அப்போது 38 எம்பிக்களும் தமிழில் பதவியேற்றனர். பதவியேற்பு உரையின் இறுதியில் திமுக கூட்டணியை சேர்ந்த எம்.பிகள் ‘’வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு என்று முழக்கமிட்டனர். பெரியார் வாழ்க என்று பலரும் தளபதி வாழ்க எனச் சிலரும் உரையாற்றினர். அப்போது பாரத் மாதாகி ஜே என முழக்கமிட்டு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கனிமொழி பெரியார் வாழ்க எனக் கூறியபோது ஜெய் ஸ்ரீராம் எனக்கூறி பாஜகவினர் கூச்சலிட்டனர்.

 I am not a single person ... OPS son proved in parliament

அதிமுக கூட்டணியில் வெற்றிபெற்ற ஒரே உறுப்பினரான தேனி தொகுதி எம்பியான ஓ.பி.ரவிந்தரநாத் குமார் பதவியேற்றார். அப்போது அவர் பதவி பிரமாணத்தின் இறுதியில், “வாழ்க எம்.ஜி.ஆர், வாழ்க ஜெயலலிதா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்” என மட்டும் கூறினார். ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் பெயரையும், தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என கூறுவதை தவிர்த்து விட்டு வந்தேமாதரம், ஜெய்ஹிந்த் என மட்டும் கூறிவிட்டு சென்றார். இதனால், பாஜக எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து கைதட்டி வாழ்த்தினர்.

 

இதனால், தான் தனி ஆள் இல்லை. பாஜகவினர் தனக்கு பின்னால் இருக்கிறார்கள் என்பதை ரவீந்திரநாத் குமார் உணர்த்தி விட்டார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios