Asianet News TamilAsianet News Tamil

நிர்மலா அறிவிப்புகளை குறிப்பெடுத்தேன்... நான் அரசியல்வாதி அல்ல... நெத்தியடி கொடுத்த சண்முகம்..!

நான் சாதாரண அரசு ஊழியன். அரசியல்வாதியல்ல. நிதியமைச்சரின் நிவாரண திட்ட அறிவிப்புகளை குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தேன் என திமுக எம்.பி.,களின் குற்றச்சாட்டுக்கு தலைமை செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். 

I am not a politician Says shanmugam
Author
Tamil Nadu, First Published May 14, 2020, 5:01 PM IST

நான் சாதாரண அரசு ஊழியன். அரசியல்வாதியல்ல. நிதியமைச்சரின் நிவாரண திட்ட அறிவிப்புகளை குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தேன் என திமுக எம்.பி.,களின் குற்றச்சாட்டுக்கு தலைமை செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். I am not a politician Says shanmugam

கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பிரச்சனை குறித்து பேசச்சென்ற திமுக மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன் தலைமை செயலாளர் சண்முகம் அவமதிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னை மக்கள் பிரதிநிதிகளான எங்களை  தலைமை செயலாளர் சண்முகம், அவமதிப்பு செய்ததற்கு வருத்தம் தெரிவிக்கா விட்டால், நாடாளுமன்ற உரிமைக்குழுவுக்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஆர்.பாலு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.I am not a politician Says shanmugam

இந்த சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ள சண்முகம், ‘’எம்.பி., அவர்கள் அப்போது பணியாளர் குறைவாக உள்ளதால் தேதி உறுதியாக கூறமுடியாது என சொல்ல வா என்றார். அப்படி கூற வேண்டாம். மனு கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்று கூறுங்கள் என நான் தெரிவித்தேன். உடனே அவர் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கிறோம் என்றார். நான் இது தான் உங்களிடம் உள்ள பிரச்சினை. எங்களின் சங்கடங்களை புரிந்துகொள்வதில்லை எனக் கூறி நீங்கள் எதைவேண்டுமானாலும் பத்திரிகையுடன் கூறிக் கொள்ளுங்கள் என்று எனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தேன்.I am not a politician Says shanmugam

மற்றபடி அவர்களை அவமதிக்கும் எண்ணம் எனக்கு எதுவும் இல்லை. அவர்கள் கூறுவது போல் என் அருகில் உள்ள சோபாவிலிருந்து தொலைக்காட்சியை பார்க்க முடியாது. எனவே நான் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது தொலைக்காட்சியைப் பார்த்தேன் என்பதில் எந்த உண்மையும் இல்லை. நான் இருக்கையில் இருந்து எழுந்து வந்த போதே தொலைக்காட்சியின் ஒலியைக் குறைத்து விட்டு தான் வந்தேன். நிதிச் செயலாளர் தொலைக்காட்சியை தொடர்ந்து பார்த்து மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகளை குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தார். அதனால் எங்கள் பேச்சுக்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை.

எதிர்க்கட்சி தலைவரை அவமதிக்கும் எண்ணம் இல்லை; நான் சாதாரண அரசு ஊழியன். அரசியல்வாதியல்ல. நிதியமைச்சரின் நிவாரண திட்ட அறிவிப்புகளை குறிப்பு எடுத்துக்கொண்டிருந்தேன்’’ என விளக்கமளித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios