Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி ஆட்சியில் நான் தனியாள்... இப்போ நாங்க யாரு தெரியுமா..? திமுகவை காரணம் சொல்லும் திருமா..!

பின்னர் 17 ஆண்டுகள் கடந்து இன்று (ஆக-02) மீண்டும் அப்பேரவைக்குள் நுழைந்தேன். ஆறு பேராக (2எம்பி+4எம்எல்ஏ) என முழக்கமிட்டு இருக்கிறார் வி.சி.க தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களைவை எம்.பியுமான தொல்.திருமாவளவன்.

I am alone in the Karunanidhi regime ... Do you know who we are now ..? DMK is the reason, sir ..!
Author
Tamil Nadu, First Published Aug 3, 2021, 1:32 PM IST

சட்டமன்ற நூற்றாண்டு மற்றும் கலைஞர் படத்திறப்பு விழா:  2001ஆம் ஆண்டு மே மாதம்  நான் தனியொரு ஆளாக- சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நுழைந்தேன்.  2004 பிப்-03 பதவி விலகினேன்.  அதன் பின்னர் 17 ஆண்டுகள் கடந்து இன்று (ஆக-02) மீண்டும் அப்பேரவைக்குள் நுழைந்தேன். ஆறு பேராக (2எம்பி+4எம்எல்ஏ) என முழக்கமிட்டு இருக்கிறார் வி.சி.க தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களைவை எம்.பியுமான தொல்.திருமாவளவன்.I am alone in the Karunanidhi regime ... Do you know who we are now ..? DMK is the reason, sir ..!

அவர் கடந்து வந்த பாதை... ஒன்று ஆறாக காரணம் அனைத்தையும் பினோக்கி பார்ப்போம்... ‘’கட்சியாக ஆரம்பத்த புதிதில் தேர்தல் அரசியலில் ஈடுபட மாட்டோம் என்று விசிக அறிவித்தது. ஆனால், 1999 மக்களவைத் தேர்தலில் ஜி.கே.மூப்பனார் அழைப்பை ஏற்று முதன்முதலாக தமாகாவுடன் கூட்டணி அமைத்து விசிக தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்தது. முதல் தேர்தலிலேயே பெரம்பலூரில் 1 லட்சம், சிதம்பரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதால் திருமாவளவன் அரசியலில் கவனம் பெற்றார்.

2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கடலூர் மாவட்டம், மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு திருமாவளவன் சட்டப்பேரவையில் நுழைந்தார். திமுக உறுப்பினராக சட்டப்பேரவையில் சுயேட்சையாக செயல்பட முடியவில்லை எனக் கூறி 2004-ல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.I am alone in the Karunanidhi regime ... Do you know who we are now ..? DMK is the reason, sir ..!

2004 மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், புதிய தமிழகம் கட்சியுடன் இணைந்து மக்கள் கூட்டணியை உருவாக்கினார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் இரண்டரை லட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் தன்னை அந்த தொகுதியில் முக்கிய சக்தியாக காட்டினார்.  2006 பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் விசிக போட்டியிட்டது. காட்டுமன்னார்குடியில் தி.ரவிக்குமாரும், மங்களூரில் கு.செல்வப்பெருந்தகையும் வெற்றி பெற்றனர். ஆனால், 2006 உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட சிக்கலால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுகவுடன் கூட்டணி அமைத்தது. 2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வென்றார்.

I am alone in the Karunanidhi regime ... Do you know who we are now ..? DMK is the reason, sir ..!

திமுக கூட்டணியில் 2011 பேரவைத் தேர்தலில் 10 தொகுதிகளிலும், 2014 மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்திலும் விசிக தோல்வி அடைந்தது. 2016 பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் விசிக 25 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சிதம்பரத்தில் தனிச் சின்னத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வென்றனர்.

இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த விசிக 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆகியால் தான் 2 எம்.பி.,க்கள், 4 எம்.எல்.ஏ.,க்கள் என பதிவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios