முத்தம் கொடுக்க வந்த  மனைவியின் நாக்கை கணவர் பற்களால் கடித்து துண்டித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேற்பாட்டால் அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிகிறது.

விசித்திரமான உலகத்தில் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் வந்து கொண்டேதான் இருக்கிறது. அது சுவாரஸ்யமானதாகவும் இருக்கலாம் அல்லது அபத்தமான தாகம் இருக்கலாம்,  அந்த நிகழ்வுகள் அனைத்தும்  சமூக வலைதளம் உள்ளிட்ட தொழில் நுட்பத்தின் மூலம்  மின்னல் வேகத்தில்  பரவி  அதிகம் பேசுபொருளாகி விடுகிறது. அதேசமயத்தில்  சில சம்பவங்கள்  ஆழ்மனதில் பதிந்து விடக்கூடிய தாகவும் உள்ளன.  அப்படி ஒரு சம்பவம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்  நடந்துள்ளது.

தஸ்லிம் அன்சாரி (36) வயதுடைய பெண் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக இருந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே  திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில்  அயுப்  மன்சூரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் அயூப்க்கு , தஸ்லீம் மூன்றாவது மனைவியாவார்.  இந்நிலையில் அயுப் வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே குடித்துவிட்டு காலம் கடத்தி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது, ஒரு கட்டத்தில்  சண்டை எல்லை மீறி போனதில் வீட்டைவிட்டு வெளியேறினார் அயுப். சிறிது நேரம் கழித்து விட்டிற்கு வந்த அவர்  சமாதானமானது போல  நடித்து மனைவி தஸ்லிமிடம் தனக்கு ஒரு "லிப் கிஸ்" தருமாறு கேட்டார்.

 தன்னை சமாதானம் செய்யத்தான் கணவர் கிஸ் கேட்கிறார் என எண்ணி தஸ்லிம் ரொமான்டிக்காக கிஸ் கொடுத்த வந்தார்,  அப்போது அவருடன்  உதட்டோடு உதட்டை வைத்து கிஸ் கொடுத்த  அயுப் ஒருகட்டத்தில் தஸ்லீமின் நாக்கை கடித்துத் துப்பினார்.  இதனால் வலி தாங்க முடியாமல்  தஸ்லீம் அலறினார். உடனே அக்கம்பக்கத்தினர் வந்து தஸ்லிமை மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவ இடத்தில்  இருந்து அயுப் மின்னல் வேகத்தில் மறைந்தார். தஸ்லிம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கணவர் அயுப்பை தேடி வருகின்றனர்
.