Asianet News TamilAsianet News Tamil

சமூக நல்லிணக்க மனித சங்கிலி தமிழகம் முழுவதும் அக்டோபர் - 11ஆம் தேதி நடைபெறும்.. கெத்து காட்டும் திருமாவளவன்.

சமூக நல்லிணக்க மனித சங்கிலி தமிழகம் முழுவதும் அக்டோபர் - 11ஆம் தேதி நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். 

Human chain for social harmony across Tamil Nadu It will be held on October - 11th. VCK Party Announced.
Author
First Published Oct 1, 2022, 4:16 PM IST

சமூக நல்லிணக்க மனித சங்கிலி தமிழகம் முழுவதும் அக்டோபர் - 11ஆம் தேதி நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 02 ஆம் தேதி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ்வியக்கத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும் பேராதரவு நல்கியிருந்தன. 

இச்சூழ்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதாலும், அக்டோபர் 02 ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும் சமூகத்தில் உருவாகியுள்ள பதற்றமான சட்டம்-ஒழுங்கு சூழலைக் காரணம் காட்டி நாம் நடத்தவிருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்வுக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 

Human chain for social harmony across Tamil Nadu It will be held on October - 11th. VCK Party Announced.

மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர்-02 அன்று அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல்துறையினர் விளக்கியதோடு, மனித சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், ஆதரவு நல்கிய அனைத்துக் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் தலைவர்களோடு தொலைபேசியின் ஊடாகக் கலந்து பேசியதன் அடிப்படையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவுமான இந்த மனித சங்கிலி நிகழ்வில் அனைத்து சனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்று அப்போராட்டத்தை வெற்றிபெற வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.

Human chain for social harmony across Tamil Nadu It will be held on October - 11th. VCK Party Announced.

இதில் 1)திரு. ஆசிரியர் கி. வீரமணி
தலைவர் - திக

2) திரு. கே.எஸ். அழகிரி 
தலைவர் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

3) திரு. வைகோ, 
பொதுச் செயலாளர் - மதிமுக

4)தோழர் கே. பாலகிருஷ்ணன் 
மாநில செயலாளர் - சிபிஐ (எம்) 

5)தோழர் இரா. முத்தரசன்
மாநில செயலாளர் - சிபிஐ 

6)திரு. தொல். திருமாவளவன் எம்.பி.
தலைவர் - விசிக 

7)திரு. கே.எம். காதர்மொய்தீன் 
தலைவர் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 

8)திரு.எம்.எச். ஜவாஹிருல்லா
தலைவர் - மனிதநேய மக்கள் கட்சி 

9)திரு. தி.வேல்முருகன்
தலைவர் - தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

Human chain for social harmony across Tamil Nadu It will be held on October - 11th. VCK Party Announced.


இதற்கு ஆதரவாக  1)தேமுதிக  
2) இந்திய தேசிய லீக் 
3) எஸ்டிபிஐ 
4)நாம் தமிழர் கட்சி 
5)சிபிஐ (எம்.எல்- விடுதலை)
 6)தமிழ்ப் புலிகள் கட்சி 
7)அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
 8)அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் 
9)தமிழர் விடியல் கட்சி 
10)பீமாராவ் குடியரசு கட்சி 

Human chain for social harmony across Tamil Nadu It will be held on October - 11th. VCK Party Announced.

ஆதரிக்கும் என்றும். 1) திராவிடர் விடுதலை கழகம் 
2) த.பெ.தி.க 
3) மக்கள் அதிகாரம் 
4) மே17 இயக்கம் 
5)காஞ்சி மக்கள் மன்றம் 
6) புலிப்படை
7)தமிழ்நாடு இளைஞர் சங்கம்
8)தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு
9) திசம்பர் 3 இயக்கம் 
10) தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச்சங்கம் 
11) தமிழ்ப்படைப்பாளிகள் கூட்டமைப்பு 
12) இந்திய தவ்ஹீத் ஜமாத்
13) மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios